நடத்திய போட்டோ ஷூட் கைவிடவில்லை - முகேன் நடிக்கும் படத்தில் இணைந்த விஜய் டிவி சீரியல் நடிகை.

By Rajkumar · 28/8/2020

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது . மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுங்க. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.

மேலும்,முகென் தன்னுடைய திறமையாலும்,வீடா முயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்தார். இதனைத்தொடர்ந்து முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார். இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பல திறமைகளை கொண்டுள்ளவர். மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள்.

மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் ராவ் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. அது மட்டும் இல்லைங்க " நீதான் நீதான்" என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் முகேன் நடிக்கும் புதிய படத்தில் சீரியல் நடிகை ஷிவானி கமிட் ஆகி இருக்கிறாராம்.

சீரியல் நடிகையான ஷிவானி சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அதன் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் ஷிவானிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. முகேன் ஹீரோவாக கமிட் ஆகியுள்ள இரண்டாவது படத்தை தமிழில் 'வெப்பம்' படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் என்பவர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில்தான் நடிகை சிவானி மகனுக்கு ஜோடியாக கமிட் ஆகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது

behindtalkies AMP · Quick view
View full