அச்சு அசலாக முகென் போலவே இருக்கும் அவரது சகோதரர்.! வைரலாகும் குடும்ப புகைப்படம்.!

By Rajkumar · 25/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் அடக்கம். இதில் முகென் ராவ் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவும் வாய்ப்பு இருகிறது.

மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார். இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தமிழிலும் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : உனக்கு கேட்க துப்பில்ல.! கடைசில மதுவை ஏத்திவிட்டது யாருனு வீடியோவை பாருங்க புரியும்.! 

அதே போல இவரது ஒரு சில ஆல்பம் பாடல்கள் இந்தியாவிலும் கொஞ்சம் பிரபலம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் இவருக்கு மலேசியாவில் இருந்து பல்வேறு ஆதரவுகள் குவிந்து வருகிறது. இவருக்கென்று மலேசிய மக்கள் பல்வேறு ஆர்மியை கூட சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கின்றனர்.

இருப்பினும் தமிழ் ரசிகர்ளுக்கு இவரை பற்றி அவ்வளவாக அறிய வாய்ப்புகள் குறைவு தான் இந்த நிலையில் முகென் ராவ்வின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இவரை போலவே இவருக்கு ஒரு தம்பியும் இருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full