மாமல்லபுரம் நாட்டிய விழாவில் திரைப்பட குழுவினர் பங்கேற்று பட வெற்றிக்கு விளம்பரப்படுத்திய தகவல் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறும் நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்வு. இந்த விழா 1992 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள் ஆன வெண்ணை உருண்டை கல், அர்ஜுனன் தபசு, ஐந்து இரதம், கடற்கரைக் கோவில் உள்ளிட்ட பல சிற்பங்களை காண வருடம் வருடம் ஆண்டு இறுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து குவிவார்கள்.

அரசு நடத்தும் நாட்டிய விழா :

அப்படி வரும் வெளிநாட்டு பயணிகள் இங்கு ஹோட்டல் விடுதிகளில் தங்கி பல்லவர் கால சிற்பங்கள் பார்த்துச் செல்வார்கள். மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவுரவப்படுத்தவும், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுலா துறை மற்றும் மத்திய சுற்றுலாத்துறை போன்ற இரு துறைகளும் இணைந்து நாட்டிய விழாவை கோலாகலமாக நடத்தி வருகிறது. மேலும், ஆரம்பத்தில் அர்ஜுனன் தபசு சிற்பம் முன் இந்த விழா நடத்தப்பட்டு வந்தது. பின்னர் 2012ஆம் முதல் கடற்கரை கோவில் நுழைவு வாயில் இடது பகுதியில் உள்ள பசுமையான புல்வெளி பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் விழா :

தற்போது இந்த இடம் மாவட்ட திட்ட குழுமம் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தை தொல்லியல் துறை நிர்வாகம் பராமரித்து வருகிறது. மேலும் நாட்டிய விழா நடத்த சுற்றுலாத் துறை நிர்வாகம் வருடம் வருடம் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற்று நடத்தி வருகிறது. மேலும், இந்த நிகழ்வு நடத்தப்படுவதற்கு முன்பு சுற்றுலா துறை அதிகாரிகளும், மாவட்ட கலெக்டர் அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கு பிறகு நிகழ்வை நடத்தி வருவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனாவால் ரத்து :

பின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளிநாட்டவர்கள் இந்த விழாவிற்கு வருவதற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் உள்நாட்டவர் பொழுதுபோக்கு கருதி இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. மேலும், கடந்த டிசம்பர் 23 முதல் ஜனவரி 23ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த கலை நிகழ்ச்சிகள் தினமும் மாலை 5.30 மணி முதல் 8 30 வரை நடைபெறும். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி முதல் நாட்டிய விழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி நடந்தது.

Advertisement

அரசு விழாவில் வேலன் படக்குழு :

இந்த நிகழ்ச்சியின் இடையில் வேலன் திரைப்பட இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி, தயாரிப்பாளர் உட்பட பலர் பங்கு பெற்றிருந்தனர். ஒவ்வொருவரும் மேடையில் பேசி பட வெற்றிக்காக பார்வையாளர்களிடம் விளம்பரம் படுத்திருந்தார்கள். அரசு விழாவில் இந்த மாதிரி தனியார் திரைப்படக்குழுவினர் பங்கேற்பது மிகவும் தவறான ஒன்று என்று பயங்கர சர்ச்சை கிளம்பி இருந்தது. அது மட்டுமில்லாமல் விழா பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கொரோனா தொற்று காரணமாக பயணியர்கள் கூட அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விழாவில் வேலன் படக்குழுவினரை காணவும், நடிகருடன் செல்பி எடுக்கவும் ரசிகர்களின் கூட்டம் திரண்டது.

Advertisement

காற்றில் பரந்த கொரோனா கட்டுப்பாடு :

இதனால் கொரோனா தொற்று பரவலுக்கு அதிகமாக வேலன் பட குழுவினர் வழிவகைசெய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கரப் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கவினின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வேலன். இந்த படத்தில் பிக் பாஸ் முகேன், பிரபு, சூரி, மீனாட்சி பாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கலைமகன் முபாரக் தயாரித்து இருக்கிறார். குடும்ப சென்டிமெண்ட், காமெடி என கலந்தடித்து கொடுத்துள்ளார் இயக்குனர்.

Advertisement