நடிப்பை துறந்து புனித பயணம் - மெக்காவில் இருந்து மும்தாஜ் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.

By Manikandan · 22/12/2022

தமிழ் சினிமாவை பொறுத்த வரை கவர்ச்சி நடிகைகள் பலர் வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில்  ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மும்தாஜ் தான். ஆரம்பத்தில் கதாநாயகியான அறிமுகமான இவர் பின்னர் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றிக்கொண்டார். 1999 ஆம் ஆண்டு இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கிய “மோனிஷா என் மோனோலிசா” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மும்தாஜ். அதன் பின்னர் தமிழ், தெலுகு என பல மொழி படங்களில் நடித்து விட்டார்.

https://www.youtube.com/watch?v=FiPbl8OpU6U

ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன் ஒரு கட்டத்தில் வடிவேலு, டி ராஜேந்திருக்கு எல்லாம் ஜோடியாக நடித்தார் மும்தாஜ். ராஜேந்திருக்கு என் மோனோலிசா” படத்திற்கு பின்னர் இவர் எத்தனையோ படங்களில் நடித்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தின் மூலம் தான். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிக பிரபலமானார்.

அதற்கு பிறகு சில படங்கள் நடித்த மும்தாஜ் பின்னர் சிறுது காலம் நடிப்பிலிருந்து ஒதுக்கி இருந்த இவர் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் இவர் வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பாய்ஸ் வெர்ஸ் கேர்ள்ஸ், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தார், இந்நிலையில் தான் கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகியா பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டு பல சர்ச்சைகளினால் மீண்டும் தமிழ் சினிமாவில் பிரபலமாகினார்.

https://www.youtube.com/watch?v=k-cVazCWN5s

மேலும் சோசியல் மீடியாக்களில் பிரபலமாக ஆக்டிவாக இருக்கும் மும்தாஜ் அவ்வப்போது தன்னுடைய குடும்பம், ட்ராவல், புதிய போட்டோஷூட் போன்ற பல புகைப்படங்களையும் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது இஸ்லாமிய மக்களின் புனித தலமான மெக்காவில் இருந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மும்தாஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் `இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு வந்துள்ளதை நான் பாக்கியமாக கருதுகிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் மக்கள் எல்லோருக்காகவும் பிராத்தனை செய்கிறேன் என்றும், நாங்கள் செய்யும் பாவங்களை மன்னித்து இன்பத்தை தாருங்கள் என்றும் கணீர் மல்க பிராத்தனை செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full