கமலை காதலித்த மும்தாஜ்..! பிக்பாஸ் மேடையில் நடந்த சுவாரஸ்யமான காதல் கதை..!

By Ajju · 17/9/2018
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார நாமினேஷனில் பாலாஜி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்ற நிலையில் நேற்று (செப்டம்பர் 16) மும்தாஜ் வெளியேற்றபட்டார். மற்ற போட்டியாளர்கள் போலவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றியதும் கமலை மேடையில் சந்தித்து மும்தாஜ் பேசிக்கொண்டிருந்தார். மும்தாஜ்,காமிலிடம் பேசிக்கொண்டிருந்த போது கமல் அவர்கள் மும்தாஜின் அண்ணன் மற்றும் அண்ணன் மகனை மேடையில் அழைத்து மும்தாஜிற்கு சர்ப்ரைஸ் செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத மும்தாஜ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலிங்கி அழுத்துவிடுகிறார். பின்னர் கமலிடம் பேசிய மும்தாஜ், நான் ஒன்னு சொல்ல ஆசப்பட்ர, நான் சென்னைக்கு வரும் போது கமல் சாரோட இரண்டு மூன்று இந்தி படத்தை பார்த்தேன். அதை பார்த்து நான் ரசிச்சேன் ஆனால், அந்த படம் அந்த அளவிற்கு ஒன்றும் இல்லை என்று தோன்றியது. என்னுடைய அண்ணன், கமல் சாரோட மிக பெரிய ரசிகர் அவர் வீட்டில் இருக்கும் போது நிறைய கமல் படங்களை பார்ப்பார். அதனை பார்த்து எனக்கும் கமல் சாரை பிடித்து போய் விட்டது. கமல் சார் என்னை நம்புங்க அப்போதா உங்கள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு (crush) ஏற்பட்டது என்று கூற அரங்கமே கை தட்டியது. மேலும், காமிலிடம் பேசிய மும்தாஜ் நீங்க ஒரு முறை ஊரை விட்டு நான் போக போகிறேன் என்று சொன்ன போது நான் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது என்னுடைய அண்ணன் அழுது கொண்டே என்னுடைய ஆபீஸ்க்கு வந்தாங்க. என்னை டிரஸ் கூட மாத்தவிடாம உங்கள பாக்க கூட்டிட்டு வந்தாங்க. நாங்க இருவரும் 2 கிலோமீட்டர் தூரமாக கார நிறுத்திட்டு ஆழ்வார்பேட்டையில் இருக்கும் உங்க ஆபீஸ்க்கு நடந்தே வந்தோம் என்று கூறினார் மும்தாஜ்.
behindtalkies AMP · Quick view
View full