பிக் பாஸ் வீட்டிலிருந்து "Eliminate" ஆன போட்டியாளர் இவர்தான்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

By Ajju · 15/9/2018
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இதில் ஐஸ்வர்யா தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டு மும்தாஜ் வெளியேற்ற பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்த வாரம் நடந்து வந்த வாக்கு பதிவில் ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜிற்கும் தான் கடும் போட்டி நிலவி வருவதாகவும், இதில் ஐஸ்வர்யாவைவிட மும்தாஜிற்கு குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் அதனால் மும்தாஜ் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்று நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேற்றபட வேண்டும் என்பது மக்கள் விருப்பமாக இருந்தாலும், இந்த வாரமும் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக் பாஸ் சதி வேலைகளை செய்து வருகிறார். இதற்காக மும்தாஜை தான் தவறானவர் என்பது போலவும் அவர் தான் அதிகப்படியான தவறுகள் செய்தவர் என்பது போல கடந்த நாட்களாக காண்பித்து வருகின்றனர். அதே போல போட்டியாளர்களும் சரி, தற்போது பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக சென்றுள்ள சீசன் 1 போட்டியாளர்களும் சரி. மும்தாஜை தான் அதிகம் குறை கூறி வந்தனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் மும்தாஜ் மீது வெறுப்பை வரவழைத்து மும்தாஜிற்கு வரும் வாக்குகளை திசை திருப்ப இருந்தனர் .இதனால் மக்கள் ஐஸ்வர்யா மீது இருந்த வெறுப்பை மறந்து மும்தாஜிற்கு எதிராக வாக்களிக்க ஒரு சாதகமாக அமைந்தது
Tamil Behind Talkies AMP · Quick view
View full