தப்பு செய்யாமல் எதுக்கு மன்னிப்பு கேக்கணும் - கமலுக்கு ஆதரவாக பொங்கி எழுந்த பிக் பாஸ் முத்துக்குமரன்

By subhashini · 4/6/2025

கமலுக்கு ஆதரவாக பிக் பாஸ் முத்துக்குமரன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக கமலின் கன்னட மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. தக் லைப் படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிவராஜ் குமாரை பார்த்து கமல், உயிரே உறவே தமிழே. சிவராஜ்குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். அதனால் தான் உயிரே உறவே தமிழே என்று பேச தொடங்கினேன். உங்களுடைய பாசை தமிழில் இருந்து வந்தது. எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது என்று கூறி இருந்தார். இப்படி கமலஹாசன் பேசியிருந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

காரணம், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று அவர் கூறியிருப்பார். இதனால் கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் வெடித்திருக்கிறது. கன்னட ரக்ஷனா வேதிகே உள்ளிட்ட தீவிர கன்னட இயக்கங்கள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கை விட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் கன்னட அமைப்புகள் தக் லைப் படத்தினுடைய போஸ்டர்களையும் கிழித்து இருந்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக கன்னட ரக்ஷனா வேதிகே தலைவர், கன்னடா தமிழுக்கு பிறகு பிறந்ததாக கூறியிருக்கிறார். உங்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு கர்நாடகாவில் தொழில் வேண்டுமா? இருந்தும் கன்னடத்தை அவமதிப்பீர்களா? உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறி இருந்தார்.

கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள்:

இதை அடுத்து கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு கமலஹாசன் தரப்பில் விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காவிட்டாலும் கர்நாடகாவில் அவருடைய படங்களை புறக்கணிக்க போகிறோம் என்று சில அமைப்புகள் அழைப்பும் விடுத்திருக்கின்றது. இதை அடுத்து கமலின் தக் லைப் படம் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. நேற்று கமல் அவர்கள் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், என்னுடைய தக் லைப் படத்தை வெளியிட கர்நாடக அமைப்பு மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக் கூடாது. பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

வழக்கு விசாரணை:

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா நீதிபதி, மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிந்திருக்கும். மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தார். இதற்கிடையில் கமலஹாசன், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது. நான் சொன்னது, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடாது என்பதை சொன்னேன் என்று கூறியிருந்தார்.

கமல் முடிவு:

இதை எடுத்து பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நீங்கள் அனுப்பிய கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை. மன்னிப்பு கேட்பதில் உங்களுக்கு அப்படி என்ன ஈகோ? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு கமல், என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகுவதை ஒத்தி வைப்பதாக கமல் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். இதனால் நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 10ஆம் தேதி ஒத்து வைத்திருக்கிறார்கள்.
மேலும், ஒட்டுமொத்த கர்நாடகாவே கமலை எதிர்த்தாலும் தமிழ்நாடு கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

முத்துக்குமரன் வீடியோ:

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், 'மன்னிப்பவன் மனிதன், மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன்' என்று கமல் கூறி இருப்பார். அந்த வசனத்தின் இறுதியில் அவர் தவறை உணர்ந்ததால் மன்னிப்பு கேட்கிறான் என்று சொல்லி இருப்பார். இந்த விஷயத்தில் கமல் தவறே செய்யவில்லை. பிறகு ஏன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்? எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தன் மொழி தான் முக்கியம் என்று கமல்ஹாசன் இருக்கிறார். இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவர் பக்கமே நிற்க வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இருக்கிறோம். தன்மானத்தை இழந்து இழுக்கவில்லை என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். இப்படி பிக் பாஸ் முத்துக்குமரன் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் காட்டுத்தீயாய் வரலாகி வருகிறது. இதை பலருமே பகிர்ந்து கமலஹாசனுக்கு ஆதரவாக ஐஸ் ஸ்டேண்ட் வித் கமலஹாசன் என்ற ஹேஸ்டேக்குகளை ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full