மகேஸ்வரியை தொடர்ந்து Body language செய்து விக்ரமனை ஏளனம் செய்த மைனா - வீடியோவை பகிர்ந்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

By Siva · 5/11/2022

மகேஸ்வரி விக்ரமனை Body language செய்து கேலி செய்த நிலையில் தற்போது மைனாவும் விக்ரமனை கேலி செய்து இருக்கிறார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

https://twitter.com/winsiva1994/status/1588545714694819841

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து தன் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருக்கிறார்.

இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே விக்ரமன் தொடர்ந்து டார்கெட் செய்யப்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் இவருக்கும் அஸீமிற்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டு இருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் சண்டை போடுவதை நிறுத்திவிட்டனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களாக மைனா மற்றும் மகேஸ்வரி தான் தொடர்ந்து விக்ரமனை வம்பிழுத்து வருகின்றனர். இந்த வாரம் இந்த டிவி- அந்த டிவி என டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகிறார்கள்.

https://twitter.com/vikraman_army/status/1588518593423343617

பின் எந்த அணி வெற்றி பெற்றது என்று அறிவித்திருந்தார்கள். அதற்கு விக்ரமன் மைனா நடத்திய நிகழ்ச்சி சரி இல்லை என்று கூறி இருந்தார். இதனால் கடுப்பாகி மைனா விக்ரமின் மீது கோபப்பட்டார். இதற்கு மகேஸ்வரியும் அவருக்கு ஆறுதலாக பேசியிருந்தார்.இதனை அடுத்து மகேஸ்வரிக்கும், விக்ரமனிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மகேஸ்வரி விக்ரமனை போல் இமிடெட் செய்து காண்பித்து இருந்தார்.இதை பார்த்த மைனா பயங்கரமாக கேலி செய்து சிரித்தார்.

பின் விக்ரமன், அடுத்தவங்களை இமிடெட் செய்ததற்கு தான் அசிமை கண்டித்து இருந்தார்கள் என்று சொன்னவுடனே நான் யாரையும் இமிடெட் செய்யவில்லை. எல்லோருக்கும் ஒரு பாடி லாங்குவேஜ் இருக்கும். அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று மகேஸ்வரி வாக்குவாதம் செய்கிறார். இப்படி நந்தினியும், மகேஸ்வரியும் கூட்டணி சேர்ந்து விக்ரமனை தாக்கி பேசி வந்தனர்.

https://twitter.com/whyrajawhy/status/1588526219523678209

இப்படி ஒரு நிலையில் நேற்றய எபிசோடில் best மற்றும் worst performerகளை தேர்ந்தெடுத்து இருந்தனர். அப்போது மகேஸ்வரி விக்ரமனை worst performerஆக தேர்நதெடுத்தார். அப்போது விக்ரமன், மைனா கூட சரியாக இந்த வாரம் விளையாடவில்லை என்று பேசிய போது விக்ரமனை கேலி செய்வது போல 'காதுல வாங்காம' பேசாதீங்க விக்ரம் என்று Body language செய்து விக்ரமனை கேலி செய்து இருந்தார். அந்த வீடியோவை சுட்டிகாட்டி மைனாவை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இதனால் விக்ரமன் என்ற ஹேஷ் டேக் Trendingல் வந்து இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full