தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கான இருக்கின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கிய நிலையில் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், திமுகவின் கட்சி தலைவர் எம் கே ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் போன்ற பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

அதே போல தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்து வரும் பா ஜ கவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  தமிழக பா.ஜ.க-வில், நடிகை நமீதா, காயத்ரி ரகுராம், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர்கள் தீனா, பரத்வாஜ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, ஃபெப்சி சிவா என தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது.

இதில் நடிகை நமீதா, கடந்த 2019 ஆம் ஆண்டு தான் பா ஜ கவில் இணைந்தார். இப்படி ஒரு நிலையில்  அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆதரித்து நடிகை நமீதா, பிரச்சாரம் செய்தார். அப்போது சிங்கம் மாதிரி ஒரு போலீஸ் ஆபீசர் நம்ம தொகுதியில் இருந்தால் எல்லாம் சூப்பரா இருக்கும். மேலும், அண்ணாமலை அவர்கள் உங்கள் சோந்த பிள்ளை, சோந்த ஊர்காரர். அதனால் அவருக்கு வோட் போடுங்க என்று தமிழை கொலை செய்தார் நமீதா.

Advertisement
Advertisement