நேற்று பலரை கலங்க வைத்த நமீதா - அவரின் உண்மையான பெயர், எந்த ஆண்டில் திருநங்கையாக மாறினார் தெரியுமா ?

By Rajkumar · 8/10/2021

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த 3 ஆம் தேதி துவங்கியது. இந்த சீசனில் 7 ஆண் போட்டியாளர்களும் 10 பெண் போட்டியாளர்களும் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை ஒருவர் கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் துவங்கிய முதல் நாளே முதல் டாஸ்க்காக கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து பேசியது பலரை கண் கலங்க வைத்தது. சிறுவயதிலேயே தனக்கு பெண் தன்மை இருப்பதை உணர்ந்த நமிதா பெண்ணாக மாற ஆசைப்பட்ட உள்ளார் ஆனால் அதை பெற்றோர்கள் ஏற்க மறுத்து இருக்கிறார்கள் இதனால் பலமுறை அவரை அடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள் மேலும் இவரை மறுவாழ்வு மையத்தில் கூட சேர்த்து இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : ரஜினி ஸ்டைலில் சட்டையை விலக்கி உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டிய இலக்கியா. வீடியோ இதோ.

ஒரு கட்டத்தில் இவரை கொலையோ செய்து விடுவதாக கூட கூறி இருக்கிறார்கள். ஆனாலும் இவர் பெண்ணாக வாழவே ஆசைப்பட்டு இருக்கிறார் எவ்வளவோ கஷ்டங்களை கடந்து 18 வயது ஆகும் வரை காத்திருந்த இவர் பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்து நீதிமன்றத்தில் இனி சுதந்திரமாக வாழலாம் என்ற தீர்ப்பையும் பெற்றிருக்கிறார் அதன் பின்னர் தனியாக வாழ்ந்து பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னை ஒரு திருநங்கை மாடலாக நிலை நிறுத்தியிருக்கிறார் நமிதா மேலும் இவருக்கு பல திருநங்கைகள் உதவி செய்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=DXJ9lw29Yu0&t=450s

இத்தனை விஷயங்களை சொன்னாலும், அவரது உண்மையான பெயரை நேற்று அவர் சொல்ல வில்லை. நமீதாவின் உண்மையான பெயர் பாலாஜியும். மேலும், சிறு வயதிலேயே தனக்கு பெண் தன்மை இருப்பதை உணர்ந்தாலும், வீட்டில் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் பல போராட்டங்களுக்கு பின்னர் தான் இவர் பெண்ணாக மாறியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தான் இவர் பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால், இவர் வெளியில் தெரிந்தது என்னவோ 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான். மிஸ் இந்தியா டைட்டிலை வென்ற பின்னர் தான் இவர் வெளியில் தெரிய ஆரம்பித்தார். அதன் பின்னர் இவருக்கு பல படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடோடிகள் 2 உட்பட மொத்தம் 25 படங்களில் நடித்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full