இருள் நீங்கி சூரிய உதயம் வந்ததது போல் இருக்கிறது - பிரியங்காவிற்கு திருமண வாழ்த்து சொல்லி பிக் பாஸ் நிரூப்

By subhashini · 17/4/2025

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமண வாழ்த்து கூறி பிக் பாஸ் பிரபலம் நிரூப் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான்.

இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

தொகுப்பாளர் பிரியங்கா குறித்த தகவல் :

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். கடைசியில் சிறப்பாக சமைத்து டைட்டில் பட்டத்தை பிரியங்கா வென்றார். தற்போது பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

ப்ரியங்கா திருமணம்:

இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரியங்கா திருமணத்திற்க்குபின் தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார். திருமணம் ஆகி கொஞ்ச நாட்கள் தன்னுடைய கணவரைப் பற்றியே பேசி வந்த பிரியங்கா திடீரென்று தன் கணவரை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ரசிகர்கள் எல்லோருமே கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பின்னால் பிரியங்காவிற்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபட்டு பிரிந்து விட்டார்கள் என்று தெரிந்தது.

ப்ரியங்கா இரண்டாம் திருமணம்:

அதை பிரியங்காவே நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டார். இதை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரியங்கா வெளிநாட்டில் ரகசியமாக வசி என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்தில் பிரியங்காவின் குடும்பம், உறவினர்கள் மட்டும் கலந்து இருந்தார்கள். இந்த திருமணத்தில் அமீர், பாவனி, அன்ஷிதா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் பிரபலமும், பிரியங்காவின் நண்பருமான நிருப், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வாழ்த்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Niroop Nandakumar (@niroopnandakumar)

நிரூப் வாழ்த்து பதிவு:

அதில் அவர், நீ பல விஷயங்களை கடந்து வந்திருக்கிறார். உன்னை நேசிக்கக் கூடிய ஒரு காதலுக்குள் நீ நுழைகிறாய். அதனை பார்க்கும்போது நீண்ட இரவுக்கு பிறகு சூரியன் உதயமானதை பார்க்கும் மாதிரி இருக்கிறது. உன்னை காதலிக்கும் நபரை மட்டும் கண்டுபிடிக்காமல் உன்னை புரிந்து கொள்ளும், மதிக்கும், கூடவே நீ சொல்லும் மோசமான நகைச்சுவைக்கும் சிரிக்கும் ஒருவரை கண்டுபிடித்திருக்கிறாய். உண்மையிலேயே நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நீ எதிர்பார்த்த எல்லா அழகான தருணங்களையும் இந்த புதிய அத்தியாயம் கொண்டுவரும் என்று நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full