இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் இவர்கள் தான்.! ஏவிக்க்ஷன் இருந்திருந்தா இவங்க போயிருப்பாங்க.!

By Rajkumar · 26/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுவைடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு ரகசிய அறைக்கு செல்ல சலுகை அளித்தும் அவர் அதனை நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கமல் நேற்று அறிவித்திருந்தார். இருப்பினும் அது போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் இன்று வாரத்தின் முதல் நாள் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில்,

யார் யாரை நாமினேட் செய்தார்கள் :

சாண்டி - ஷெரின் மற்றும் வனிதா
முகென் - கவின் லாஸ்லியா
ஷெரின் - கவின் மற்றும் முகென்
லாஸ்லியா - வனிதா மற்றும் ஷெரின்
தர்ஷன் - கவின் மற்றும் வனிதா
வனிதா - கவின் மற்றும் முகென்
கவின் - வனிதா மற்றும் ஷெரின்
சேரன் - கவின் மற்றும் முகென்

இறுதியாக இன்று நடந்து முடிந்த நாமினேஷன்படி கவின், வனிதா,முகென், ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகினார்கள். இதில் ஷெரின் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றார். ஆனால், இத வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் இன்றைய நாமினேஷன் ரசிகர்களுக்கு வெறும் கண் துடைப்பு மட்டும் தான்.

இருப்பினும் ஒருவேளை இந்த வாரம் எலிமினேஷன் வைத்திருந்தால் கண்டிப்பாக வனிதா வெளியேறி இருப்பார் என்பதில் எந்த விதத்திலும் சந்தேகமில்லை. ஒருவேளை வனிதா அடுத்த வாரம் எலிமினேட் ஆனால் கூட அவர் ரகசிய அறையில் வைக்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. எனவே, இன்னும் இரண்டு வாரத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் என்பதே இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full