கசிந்தது இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.! நாம எதிர்பார்த்தது தான்.!

By Rajkumar · 19/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவு கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்ஷ்ய் வெளியேற்றப்பட்ட சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேறினர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர்.

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

எனவே, இந்த வாரம் ஷெரீனை யாரும் நாமினேட் செய்ய இயலாது. மேலும், இந்த வார நாமினேஷன் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார நாமினேஷனில் கஸ்தூரியின் பெயர் நிச்சயம் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இன்றைய முதல் ப்ரோமோ மூலம் லாஸ்லியா சேரனை நாமினேட் செய்தது மட்டும் தான் தெரியவந்தது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் யார் யார் நாமினேட் செய்தார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரம் சாண்டி, தர்ஷன், சேரன் கஸ்தூரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full