சமுதாயத்தில் இருக்கும் ஜாதிகளை ஒழிக்க பலரும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர் ஆனாலும் ஜாதிக் கொடுமைகள் ஜாதி கௌரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கருப்பர் கூட்டம் விவகாரம், பெரியார் சிலை மீது காவி சாயம் போன்ற பல்வேறு சர்ச்சைகளும் நாம் கடந்து தான் வந்திருக்கிறோம். அதே தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் நாம் அடிக்கடி பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

Nutan Naidu

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் 20 வயது தலித் நபர் வேலைக்கு வர மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை பிடித்து மொட்டை அடித்துள்ள சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். தலித் இனத்தை சேர்ந்த இந்த 20 வயதுடைய நபர், குடும்ப வறுமை காரணமாக, தெலுங்கு பிக்-பாஸ் பிரபலம் நூதன் நாயுடு என்பவர் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். ஒரு மாதம் வேலை செய்துவிட்டு பின்னர் சம்பளத்தை பெற்றுக்கொண்டு வேலைக்கு வருவதை நிறுத்தியுள்ளார் ஸ்ரீகாந்த். இந்நிலையில், வீட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போனை காணவில்லை என்று நூதன் நாயுடுவின் மனைவி மதுப்பிரியா, ஸ்ரீகாந்தை வீட்டிற்கு வர சொல்லி இருக்கிறார்.

பின்னர் வீட்டிற்கு சென்றுள்ள ஸ்ரீகாந்த், நான் ஐபோனை எடுக்கவில்லை என்று கூறியதை மதுப்பிரியா நம்பவில்லை. இதையடுத்து வேண்டுமானால் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனது வீட்டில் இருந்த வேலையாட்களை வைத்து, ஸ்ரீகாந்தை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், அந்த இளைஞனுக்கு மெட்டையும் அடித்து அவமானப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து காவல்நிலையத்தில் ஸ்ரீகாந்த் புகார் அளித்ததையடுத்து, மதுப்பிரியா உட்பட வேலையாட்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இ

Advertisement

Advertisement
Advertisement