ஷிவானியுன் இணைத்து வந்த கிசுகிசு. அதெல்லாம் பொய் என்று மறுத்த முகன்.

By Rajkumar · 29/8/2020

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது . மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுங்க. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.

மேலும்,முகென் தன்னுடைய திறமையாலும்,வீடா முயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்தார். இதனைத்தொடர்ந்து முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார். இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பல திறமைகளை கொண்டுள்ளவர். மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள்.

மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் ராவ் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. அது மட்டும் இல்லைங்க " நீதான் நீதான்" என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார்.இந்த நிலையில் முகேன் நடிக்கும் புதிய படத்தில் சீரியல் நடிகை ஷிவானி கமிட் ஆகி இருக்கிறார் என்று கிசு கிசு வெளியானது.முகேன் ஹீரோவாக கமிட் ஆகியுள்ள இரண்டாவது படத்தை தமிழில் 'வெப்பம்' படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் என்பவர் இயக்க இருக்கிறார்.

https://www.instagram.com/p/CD6j8sSjMDa/

இந்த படத்தில்தான் நடிகை சிவானி முகேனுக்கு ஜோடியாக கமிட் ஆகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள முகேன், இது முற்றிலும் பொய்யான தகவல் என்னுடைய படத்தை பற்றிய அறிவிப்புகளை நானே நேரடியாக அறிவிப்பேன். உங்களின் அக்கறைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full