ஏன் உயிர வாங்குறீங்க - ரசிகர்களின் கேள்வியால் Liveல் கடுப்பான ஓவியா. அப்படி என்ன கேட்டாங்க.

By Rajkumar · 2/3/2023

கல்யாணம் எப்போ? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஓவியா அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் ஓவியா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் விமல் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் தான் ஓவியா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதோடு இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு மலையாளத்தில் கங்காரு என்ற படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார். பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் ஓவியா எங்கு சென்றார் என்று தெரியாமல் இருந்த போது 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

ஓவியா குறித்த தகவல்:

இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும், ஆரவ்வை உருகி உருகி காதலித்தார். அனால், அந்த காதல் இவருக்கு காய் கொடுக்கவில்லை. இருப்பினும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல படங்களில் கமிட்டானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தார். இருந்தாலும், இவர் முன்னணி நடிகையாக முன்னேற முடியவில்லை.

சோசியல் மீடியாவில் ஓவியா:

அதுமட்டும் இல்லாமல் சமீப காலமாகவே பட வாய்ப்புகள் இல்லாமல் ஓவியா தவித்து வருகிறார். இருந்தாலும், இவர் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இதனால் ஓவியாவை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஓவியா அவர்கள் தன்னுடைய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்.

ரசிகர்கள் கேட்ட கேள்வி:

இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இவர் உங்களுடைய காதலரா? திருமணம் எப்போது? என்று கேட்டார்கள். எப்போதுமே ஓவியாவை பார்த்து பலரும் கேட்கும் கேள்வி உங்கள் திருமணம் எப்போ? என்பது தான். ஆனால், ஓவியா அதை கண்டுகொள்ளாமல் இருந்தார். அதே போல இவர் காதலித்த ஆரவ், திருமணம் செய்துகொண்டு குழந்தையே பெற்றுவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் ஓவியா கலந்துரையாடி இருக்கிறார். அப்போது அவரிடம் திருமணம் தொடர்பான கேள்வி ரசிகர்கள் கேட்டிருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Oviya (@happyovi)

திருமணம் குறித்து ஓவியா சொன்னது:

இந்த கேள்விக்கு ஓவியா கூறியிருந்தது, எப்ப பார்த்தாலும் இதே கேள்விதான் கேட்பீர்களா! எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா சுத்தமா இல்லை. இந்த மாதிரி கேள்வியை கேட்டு ஏன் உயர வாங்குறீங்க என்று கோபமாக பதில் அளித்து இருக்கிறார். ஓவியாவின் இந்த பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள் என்று சொல்லலாம். இனி ஓவியாவிடம் இந்த கேள்வி ரசிகர்கள் கேட்காமல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full