ஒரு ஹாய் சொல்லுங்க அதை என் ட்விட்டரில் பின் செய்து கொள்கிறேன். ரசிகரின் கேள்விக்கு பல்ப் கொடுத்த ஓவியா.

By Rajkumar · 20/1/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். அதிலும் இந்த முதல் சீசனில் பங்குபெற்ற நடிகை ஓவியா ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

https://twitter.com/OviyaaSweetz/status/1219209689210114048

இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார் பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார் இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து. மேலும், இவருக்கு என்று சமூக வளைதளத்தில் பல்வேறு ஆர்மிக்களையும் உருவாக்கினார்கள்.

பிக்பாஸ் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பெற்ற பிரபலத்தை வைத்து இவருக்கு எந்த பட வாய்ப்பும் தேடி வரவில்லை. இதனால் ஒரு சில படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்த ஓவியா, சமீபத்தில் 90எம்எல் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் ஆபாச காட்சிகளில் நடித்தும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளானார்.

https://twitter.com/OviyaaSweetz/status/1219210078663741440

இருப்பினும் இவருக்கென்று தற்போதும் தனிப்பட்ட ஆர்மி இருந்து தான் வருகிறது. இந்த நிலையில் நடிகை ஓவியா சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் தயவுசெய்து எனக்கு ஒரு ஹாய் மட்டும் சொல்லுங்கள் அதை நான் என்னுடைய ட்விட்டரில் பின் செய்துகொள்கிறேன் என்றுகூறி இருந்தார். ஆனால், அந்த ரசிகர் எதிர்பாராதவிதமாக நடிகை ஓவியா கொஞ்சமாவது வளருங்கள் என்பது போல ஆங்கிலத்தில் Grow Up என்று பதிலளித்தார். ஓவியாவின் இந்த பதிலை எதிர்பார்க்காத அந்த ரசிகர் எனக்கு இந்த பலர் தேவைதான் என்று கூற அதற்கு ஓவியாவும் ஸ்மாய்லியுடன் ரிப்ளை செய்திருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full