பீர்- பிரியாணி இது தான் ஓவியாவின் நியூ இயர் விருந்து..!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

By Rajkumar · 31/12/2018

பிக் பாஸ் என்ற நிகச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடிந்தவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தலும் இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா `காஞ்னா-3', `களவாணி-2', `90 எம்.எல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `90 எம்.எல்' படத்தை அனிதா உதுப் இயக்குகிறார். சிம்பு இசையமைக்கிறார். 

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு படத்தில் இருந்து பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட இருக்கிறது. `பீர் பிரியாணி' என தொடங்கும் இந்த பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

https://twitter.com/anitaudeep/status/1079374458672934917

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full