Trp-காக தற்கொலை செய்யும் அளவிற்கு டார்ச்சர் - பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஓவியா ஷாக்கிங் கருத்து.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் ஓவியா தான் முன்னோடி. வகைகள் பல பேர் இருக்கிறார்கள் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் என்று பல்வேறு வழிகளில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 3 சீசன்களை கடந்திருக்கிறது. என்னதான் 3 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த சீசனில் எத்தனையோ பேர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தாலும் ஓவியா அளவிற்கு தற்போது வரை யாரும் பிரபலம் அடையவில்லை என்பது தான் உண்மை.
https://twitter.com/OviyaaSweetz/status/1287039303176998912
தமிழில் களவாணி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான ஓவியா அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான். 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியாவிற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு ஏற்பட்டது. மேலும், இவருக்கு என்று சமூக வலைதளங்களில் ஆர்மி கூட உருவானது.
பிக்பாஸ் வீட்டில் இவர் உண்மையாக இருந்தார் என்றும் போலியாக மற்றவர்களைப் போல நடிக்கவில்லை என்றும் இவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
https://twitter.com/OviyaaSweetz/status/1287050853245886464
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்தால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? இல்லை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் ? என்று கேட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் தடை செய்ய வேண்டும் என்று பதிலளித்திருந்தார் .அதற்கு பதில் தெரிவித்த ஓவியா பிக்பாஸில் டிஆர்பி காக போட்டியாளர்களை தற்கொலை செய்யும் அளவிற்கு டார்ச்சர் செய்யக்கூடாது என்று பதிவிட்டிருக்கிறார்