நேத்து குறும்படத்தில் ட்ரெஸ் நல்லா இருக்குன்னு அபிநய் சொன்னதும் ச்சீ என்று சொல்லிவிட்டு பாவனி செஞ்சத நோட் பண்ணீங்களா ?

By Arun · 13/12/2021

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் - அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவது அபிநய் மற்றும் பவானி உறவுதான் . அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

https://twitter.com/bb5cwc3/status/1470134342047264770

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற டாஸ்க்கில் கூட சிபி, அநபிய்க்கும் பாவனிகும் இருப்பது நட்பும் இல்லை காதலும் இல்லை. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் உறவு பற்றி யாருக்கும் புரியவில்லை என்று கேள்வி கேட்டிருந்தார் இதற்கு ஒரு சிலர் ஆம் என்றும் ஒரு சிலர் இல்லை என்றும் கூறி இருந்தார்கள்.

இதையும் பாருங்க : ப்பா, பாண்டியன் ஸ்டார்ஸ் மீனா மகனா இது, எப்படி வளந்துட்டார் பாருங்க. லேட்டஸ்ட் புகைப்படம்.

பாவனி விவகாரம் தான் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பேசு பொருளாக இருந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் பாவனி, அபிநய்யை பற்றி பேசியதை குறும்படம் போட்டு காண்பித்து பாவனியின் முகத்திரையை கிழித்தார் கமல். இந்த வீட்டில் எனக்கு பிடிக்காத நபர் அபிநய் தான் ஆனால், அவர் எனக்கு நல்ல நண்பர் என்று கமலையே குழப்பிவிட்டார் பாவனி.

https://twitter.com/bb5cwc3/status/1470140736964161547

இருப்பினும் அபிநய் தன்னிடம் நெருக்கம் காண்பிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி இருந்தார். நேற்று ஒளிபரப்பபட்ட குறும்படத்தில் பாவனி, அணிந்து இருக்கும் ட்ரெஸ் நல்லா இருக்கிறது என்று அபிநய் சொன்னதும் கொஞ்ச நேரத்தில் 'ச்சீ, இந்த ட்ரெஸ் எனக்கு புடிக்கவில்லை' என்று கூறி ட்ரெஸை மாற்றிக்கொண்டார் பாவனி.

behindtalkies AMP · Quick view
View full