பொன்னம்பலம், தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர்.90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த படங்களில் வில்லனாக நடித்து வந்த இவர், சினிமாவில் பல புதிய விண்ணல் நடிகர்களின் வருகையால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்தது. அதனால் ஒரு சில சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் பொன்னம்பலம்.பின்னர் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவி செய்தார். மேலும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துவந்தார் கமல் .இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Advertisement

கமலை தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு உதவிய ரஜினி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்றோகொண்டதாவும் தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம். பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது பேசியதாவது, எனக்கு பல ஆண்டுகளாக உடல்நிலை சரியாமல் தான் இருந்தது சினிமாவில் நான் சம்பாதித்து போது அதை நான் சேர்த்து வைக்கவில்லை. தற்போதும் ஒரு வாடகை வீட்டில்தான் இருந்து வருகிறோம்.

இறுதியாக என்னிடம் ஒரு 25 ஆயிரம் ரூபாய் இருந்தது. அதை கூட என் நண்பர் அவசரமாக கேட்டார் என்று அவருக்கு கொடுத்து விட்டேன் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவமனையில் சேர்ப்பதற்கு சரத்குமார் உதவினார். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது லாக்டோன் நேரத்தில் ஒரு இருபது முறையாவது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணம் தோன்றியது என்று கூறியுள்ளார் பொன்னம்பலம்.

Advertisement

Advertisement
Advertisement