அஜித்தை தான் பெருசா நம்பி இருக்கிறேன் - உதவி கேட்ட பொன்னம்பலம். செய்வாரா அஜித் ?
பொன்னம்பலம், தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர்.90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த படங்களில் வில்லனாக நடித்து வந்த இவர், சினிமாவில் பல புதிய விண்ணல் நடிகர்களின் வருகையால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்தது. அதனால் ஒரு சில சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகர் பொன்னம்பலம்.பின்னர் 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
https://twitter.com/rs_prakash3/status/1281221595420336134
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவி செய்தார். மேலும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துவந்தார் கமல் .இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கமலை தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு உதவிய ரஜினி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு உடல்நிலை சரியாக இல்லை என்று முதலில் சரத்குமாரிடம் தெரிவித்ததாகவும், அவர் தான் 50,000 ரூபாயை கொடுத்து முதலில் சிகிச்சைக்கு உதவியதாக கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=zjt_ufMnCa8&t=1030s
தற்போது மிகவும் வறுமையில் இருப்பதாகவும். சத்யராஜ், விஜய், லாரன்ஸ், அஜித் போன்றவர்கள் தமக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பொன்னம்பலம். அதிலும் அஜித்தை தான் நான் பெரிதும் நம்பி இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். ஸ்டண்ட் யூனியனில் இருந்து தனக்கு வரவேண்டிய பணம் இன்னும் வரவில்லை என்றும் இந்த சமயத்தில் அவர்கள் எனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்தாலே போதும் என்றும் கூறியிருக்கிறார்.