உடலின் இதுக்கு கிழ எனக்கு சொரனையே கிடையாது - பிக் பாஸிலேயே தனது உடல் நலம் குறித்து சொன்ன பொன்னம்பலம்.

By Rajkumar · 10/7/2020

பிரபல நடிகரான பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது. பொன்னம்பலம், தமிழ் சினிமாவில் ஒரு சண்டை கலைஞராக வந்தவர் பின்னர் இவர் சண்டை பயிற்சியாளர் பின்னர் ஒரு இரு காட்சிகளில் நடிக்கவந்தார். பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்தவர். பின்னர் இயக்குனர் ஹீரோ நகைசுவை என்று பல அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.

https://twitter.com/idiamondbabu/status/1281224779425615872

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் வில்லன் நடிகராக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம் . இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார். இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் பொன்னம்பலம் தனது உடல் நலம் குறித்து பிக் பாஸ் வீட்டில் இருந்த போது கூறிய விஷயத்தை நினைவு கூறலாம்.

பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சக போட்டியாளரான நடிகர் சென்றாயனிடம் தனது சோகமான பகுதிகளை பகிர்ந்து கொண்டார். நடிகர் பொன்னம்பலத்திற்கு பல ஆண்டுகளாக அதிகபடியான குடி பழக்கம் இருந்துள்ளதாம், அதனால் அவரது சிறுநீரகம் 40 சதவீதமும், ஈரல் 70 சதவீதமும் சேதமடைந்துள்ளாதாம். அவர் தற்போது உயிரோடு இருப்பதே கடவுளின் அருள் என்றுன் தன்னுடன் இருந்த நண்பர்கள் பல பேர் குடியால் இறந்துள்ளனர் என கூறி சென்றாயனை நெகிழ்ச்சியடைய வைத்தார் பொன்னம்பலம்.

அதோடு இத்தனை ஆண்டுகள் சினிமாவில் முரட்டு தனமான வில்லனாக நடித்து வந்த பொன்னம்பலத்தின் முழங்காலிற்கு கிழே சொரணையற்று கிடைக்கிறதாம். அவரது கால்களை சென்ட்ராயன் அழுத்தி பார்க்கும் போது நடிகர் பொன்னம்பலம் வேகமாக அலுத்தாதீங்க தோல் கிழிந்துவிடும்' என்று கூறினார். அதை அப்போது நாம்கேட்ட போது அவரது பரிதாப நிலையை கண்டு மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை.

behindtalkies AMP · Quick view
View full