அவர் மேலயும் ஏதாவது பழி போட போற - கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பூர்ணிமாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 6/1/2024

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 லட்ச பணத்துடன் வெளியேறி இருக்கிறார் பூர்ணிமா. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 94 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார்.

இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருந்தது.இதில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் யார் செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த டாஸ்க்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு இருக்கிறது. மேலும், இன்னும் சில தினங்களிலேயே இந்த நிகழ்ச்சி முடிவடைகிறது. இதில் யார் டைட்டில் வின்னர்? ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

இப்படி ஒரு நிலையில் 16 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பூர்ணிமா. இதற்கு முந்தைய சீசன்களில் கவின், சிபி, கேப்ரில்லா, அமுதவாணன் போன்றோர் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பார்கள். இது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த சீசனில் தான் பணப்பெட்டியில் அதிக தொகை வைக்கப்பட்டது.

இது பிக் பாஸ் வராற்றிலேயே அதிகம். பணப்பெட்டியில் இருந்த 16 லட்சத்தை சேர்த்து அவர் பிக் பாஸில் அவர் இருந்த 95 நாட்களுக்கான சம்பளமும் வழங்கப்பட்டு இருக்கிறது. பூர்ணிமாவிற்கு இந்த சீசனில் ஒரு நாளைக்கு 20ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. எனவே 95 நாட்களுக்கு 20000 x 95 = 1900000 லட்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. பணப்பெட்டியில் இருந்த 1600000 லட்சத்தையும் சேர்த்தால் பூர்ணிமா 35 லட்சத்துடன் வெளியேறிய இருக்கிறார்.

https://twitter.com/zashi7501/status/1743299185292828987

அந்த 16 லட்சம், வெற்றியாளருக்கு வழங்கப்படும் 50 லட்சத்தில் இருந்து கழிக்கப்படும். எனவே இந்த சீசன் வெற்றியாளருக்கு 34 லட்சம் தான் பரிசாக கொடுக்கப்படும். அந்த வகையில் டைட்டில் வின்னருக்கு கொடுக்கப்படும் பரிசுத்தொகையை விட அதிகமான தொகையுடன் வெளியேறி இருக்கிறார் பூர்ணிமா. பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பூர்ணிமாவிற்கு அவரது வீட்டில் மேல தாளத்தோடு வரவேற்பு கிடைத்தது.

https://www.youtube.com/shorts/IHwuCmrGtlY

அப்போது ரோட்டில் செம குத்தாட்டம் போட்டார் பூர்ணிமா. இப்படி குத்தாட்டம் போட்ட கையோடு வேறு ஒரு உடையை மாற்றிக்கொண்டு நேரா கேப்டன் சமாதிக்கு சென்று அங்கே கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினார் பூர்ணிமா. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இது ஆக்ஷன் மேடம் என்றும் அவர் மீதும் ஏதாவது பழி போட போற என்றும் கமன்ட் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full