நைட் மாயா வேணுமா? படு மோசமாக கமண்ட் அடித்த பூர்ணிமா. இதெல்லாம் Men Saftyல வராதா?

By subhashini · 9/11/2023

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 37 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது.

https://twitter.com/SriniMama1/status/1721846513226166288

அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.

பிக் பாஸ் 7

இதற்கு முழு காரணம் மாயா என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே மாயா, தான் பெரியவள் என்றும், தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும் திமிராக நடந்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் உள்ள பல போட்டியாளர்களுடன் சண்டை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தனக்கென்று ஒரு கேங் ஃபார்ம் செய்து கொண்டு பிற போட்டியாளர்களை வம்பிழுத்துகிறார்.

நிகழ்ச்சியில் மாயா:

முதலில் இவர் விஜய் வர்மா உடன் சேர்ந்து கொண்டு மற்றவர்களை கிண்டல் செய்தார். அதற்கு பிறகு பூர்ணிமா, ஐசுவை தன்னுடைய கூட்டணியில் சேர்த்துக்கொண்டு விமர்சித்து பேசி வருகிறார். இந்த வார கேப்டனாக மாயா தேர்வாகி இருக்கிறார். நேற்று பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் அவருடைய கேங் அர்ச்சனாவை டார்கெட் செய்து இருந்தார்கள். இதனால் கடுப்பான அர்ச்சனா மாயாவை திட்டி தீர்த்து இருக்கின்றனர்.

மாயா-பூர்ணிமா செய்த வேலை:

அது மட்டும் இல்லாமல் மாயா ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார். கேப்டனாக இருக்க தகுதியே இல்லை என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று எபிசோடில் பிக் பாஸ் லெட்டர் டாஸ்க் கொடுத்திருந்தார். லட்டர் படித்து முடித்த உடனே மாயா,Can I have some Bravo ? என்று கேட்டிருக்கிறார். உடனே பூர்ணிமா, Do you want some Maya, Tonight? என்று கேட்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதற்கு பிராவோ ஒன்றும் தேவையில்லை என்று சொல்லி இருக்கிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த பலருமே பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதீப் மீது போட்ட புகார் எல்லாம் போய். உண்மையில் ஆண்களுக்கு தான் பாதுகாப்பில்லை. பூர்ணிமா, மாயா ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறார்கள். கமலஹாசன் ஏன் இது குறித்து கேள்வி கேட்கவில்லை. கண்டிப்பாக இந்த வார இறுதியில் கேட்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full