காலேஜ் படிக்கறப்ப நல்ல பொண்ணு, ஆனா பிக் பாஸ்ல - பூர்ணிமாவிற்கு இந்துஜா கொடுத்த அட்வைஸ். இதனால் தான் சரியா பேசலாம்.

By Arun · 10/12/2023

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

https://twitter.com/EleganzyDezignz/status/1729440657444610477

இந்த நிகழ்ச்சியில் பரிட்சயமான முகங்களில் ஒருவர் பூர்ணிமா ரவி. இவர் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே தற்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். குறிப்பாக, இவர் மாயாவுடன் சேர்ந்து கொண்டு செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் அளவே இல்லை.பிற போட்டியாளர்களை கிண்டல், கேலி செய்வது, நிகழ்ச்சியில் இருந்து அவர்களை தூக்க திட்டமிடுவது போன்ற பல வேலைகளை பூர்ணிமா செய்திருக்கிறார்.

இதுவரை அவர் சம்பாதித்த மொத்த பேரையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் கெடுத்து கொண்டார் என்றே சொல்லலாம். ஒரு கட்டத்திற்கு மேல் இவர் எல்லை மீறி கமலஹாசனையே விமர்சித்து இருக்கிறார். மேலும், கமல் எது சொன்னாலும் சாரி என்று சொல்லி பேசியதை கேட்டு கமலே கொந்தளித்து அவரை திட்டியிருந்தார்.இருந்தாலும் பூர்ணிமா தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்.

https://twitter.com/Dharsh_2020/status/1729458382191649260

அவ்வளவு ஏன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'பார்க்கிங்' படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இந்துஜா தன்னை கண்டுகொள்ளவில்லை என்று கண்ணீர் வடித்தார் பூர்ணிமா. அதற்கு காரணம் இந்துஜா தனது கல்லூரி தோழி என்றும் அவளும் நானும் பல வருடங்களாக நெருங்கிய தோழிகள் என்றும் கூறி இருந்தார். மேலும், இந்துஜா மற்ற போட்டியாளர்களிடம் சகஜமாக பேசிய அளவு கூட பூர்ணிமாவிடம் பேசவில்லை. இதனால் பூர்ணிமா ரொம்பவே மனசு உடைந்து போய்விட்டார்.

மேலும், என்னிடம் அவள் சரியாக பேசவே இல்லை. வெளியில் நடப்பதை குறித்து நான் அவளிடம் கேட்கவே இல்லை. ஆனால், அவள் என் கண்ணை பார்த்து கூட பேசவில்லை. ஏதோ தப்பாக இருக்கிறது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அவள் என்னை பார்த்தால் எப்படி நடந்து கொள்வார் என்று எனக்கு தெரியும். இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து இந்துஜாவே விளக்கமளித்துள்ளார்.

https://twitter.com/itzsekar/status/1733669690353000620?s=48

அதில் ' படத்தின் ப்ரோமோஷனுக்கா தான் உள்ளே போனோம்.உள்ளே செல்லும்போது எனக்கு சில விஷயங்களை சொல்லித்தான் அனுப்பினார்கள் அதனால் தான் யாருக்கும் அங்கே ஸ்பெஷல் அட் டென்ஷன் கொடுக்காமல் அனைவரிடமும் சமமாக பேசினேன். கல்லூரியில் அவள் எனக்கு நெருங்கிய தோழி கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் பேசுவோம். கல்லூரியில் எனக்கு தெரிந்த பெண்ணாக அவள் மிகவும் ஸ்வீட்டான பெண் தான். எனக்கு தெரிந்து ஒரு சில விஷயத்தை மாற்றிக் கொண்டு விளையாடினால் நல்லா வருவாள்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full