'அனன்யாவ பத்தி பிக் பாஸ் கிட்ட போய் அப்படி சொன்னவன் தான நீ ' - mute செய்யப்பட்ட பிரதீப் பேசிய விஷயம். என்ன தெரியுமா ?

By Dhilip Kumar · 11/10/2023

இன்று வெளியான பிரோமில் பிரதீப் மற்றும் நிக்ஸசன் சண்டைக்கு இது தான் காரணமாம். கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

https://twitter.com/rekha67030822/status/1711771710276649167

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.அதில் அனன்யா முதல் நபராக வெளியேறினர்.

இன்றைய ப்ரோமோ;

இன்றைய ப்ரோமாவில் நிக்ஸசன் மற்றும் பிரதீப் ஆண்டனிக்கு சண்டை மூட்டி கொண்டது. அதில் நிக்ஸான் கூறுகையில் எனக்கு தகுதி இல்லை நீ அமைதியாக உட்கார் என்று எப்படி கூறலாம் என்று பிரதீபிடம் சண்டைக்கு போனார். அதற்குப் பிரதீப் நீ வீரன் மாறி பேசுகிற ஆனா நீ வீரன் எல்லாம் கிடையாது என்று கூற அதை கூற நீ யாரென்று நிக்ஸசன் எதிர்த்து பேசினார். நிக்ஸான் நான் வெளியே பாட்டு பாடி ரசிகர்களை சேர்த்து வசீகரித்து நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

https://twitter.com/Supermax98/status/1711770339955396984

என்னைப் பார்த்து தகுதி இல்லை என்று கூறுவதற்கு உனக்கு தான் தகுதி இல்லை. நீதான் வெளியே இருந்து இந்த கேம் பற்றி பக்கவாக புரிந்து கொண்டு இங்கு வந்து ஸ்டர்ஜி கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஸ்டர்ஜி வைத்து தான் இந்த கேம் விளையாட ஜெயிக்க வேண்டும் என்று அவசியம் எனக்கு கிடையாது. உனக்கு உன்னிடம் திறமை இல்லை என்னிடம் திறமை இருக்கிறது. என்று நிக்ஸசன் கூறினார். உனக்கு பாடுவதற்கு ஆடுவதற்கு வரவில்லை என்றால் மூடிக்கொண்டு இரு என்றும் நிக்ஸசன் அவர் கூறினார்.

இதற்க்கான பின்னணி:

இதற்கான பின்னணி என்னவென்றால் அனன்யா சிகரெட் பிடித்ததற்காகத்தான் நான் வெளியேறினார் என்று நீ பிக் பாஸிடம் கூறினால் அதற்காக பிக்பாஸ் சிகரெட் அனுப்ப வேண்டாம் என்றும் நீ கூறினாய் என்று பிரதீப் நிக்ஸசனிடம் கூறினார். நீ என்னிடம் பேசுவதற்கு தகுதி இல்லை என்று பிரதீப் நிக்சனை பார்த்து கூறினார். ஹவுஸ் மேட் அனைவரும் பிரதீப்பிடம் நீ ரூல்ஸ் படிதான் கேம் விளையாடுறியா என்றும் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின் அது பெரிய சண்டையாக மாறியது.

https://twitter.com/ImSoul_01/status/1711778324454994230

அதனை விஜய் டிவியை நிர்வாகம் அந்த சிகரெட் என்ற வார்த்தையை மியூட் செய்து வெளிபரப்பியது. அது குறித்து பிரதிப்பின் கருத்திற்கு அங்கு அமர்ந்திருந்த ஹவுஸ் மேட் அனைவரும் அவருக்கு எதிர்ப்பாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சண்டைக்கு அவர் அவர் ரசிகர்கள் அவர்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இது குறித்து என்ன நடக்க போவது என்பது இன்று இரவு தான் தெரியும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full