'பேசாதான்னாங்க, புரட்டி எடுத்தாங்க' - Red Card விவகாரத்தில் தனது ஸ்டைலில் End Card வைத்த பிரதீப்.

By Arun · 7/11/2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது.

https://twitter.com/iam_Tharani/status/1721783708523581667

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள்.

ஆனால், இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை. பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும் இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

https://twitter.com/TheDhaadiBoy/status/1721791477217718508

பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா&கோ தான் முக்கிய காரணம் என்றாலும் கமல் இந்த விஷயத்தை தீர விசாரிக்காமல் செயல்பட்டுவிட்டார் என்பதே பலரின் வாதமாக இருந்து வருகிறது. பிரதீப்பிற்கு நடந்தது அநீதி அவரை மீண்டும் பிக் பாஸில் கொண்டு வர வேண்டும் என்றும் விஐய் டிவி ப்ரோமோக்களின் கீழ் Justiceforpradeep என்ற ஹேஷ் டேக்குகளை ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அதே போல ட்விட்டரில் கடந்த சில தினங்களாக கமலை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் கமல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதீப் பதிவு ஒன்றை போட்டுள்ளார். “நான் உங்களின் பெரிய ரசிகன் சார். உங்களுடைய 69 வது பிறந்த நாளிற்கு என்னுடைய வாழ்த்துகள். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் அளித்த கலை மற்றும்  பங்களிப்பு மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. லவ் யூ சார் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவின் கீழ் கமலின் ‘வசூல் ராஜா’ படத்தில்  வரும் ' இவரு Exit கொடுக்குறாராம் எனக்கு, நான் என்ட்ரி கொடுக்கும் ஆளுங்க. யாருன்னா வேணும்னு செய்வார்களா நான் செய்வேன். அதான் நாம்ம ஸ்டைல் என்ற வசனம் வரும் காட்சியை வைத்து மீம் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். 

https://twitter.com/DeepakC79701581/status/1721533673172853119

இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ள பிரதீப் ' நான் ஒரு முட்டாளுங்க பாடலின் வீடியோ ஒன்றை பகிர்ந்து, எனக்கு ஆதரவளிப்பவர்களுக்கு, பிக் பாஸ் குறித்த விஷயங்கள் போதும். யூ -டியூபர்ஸ்களுக்கும், கன்டென்ட் கிரியேட்டர்ஸ்களுக்கும் வெறுப்பான கன்டென்ட் உருவாக்குவது தான் வேலை. அவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.நானே எனக்கான கன்டென்ட்டை உருவாக்கி கொள்கிறேன். எதிலும் சிக்கி கொள்ள விரும்பவில்லை. என்னுடைய ஆதரவாளர்கள் இதை ஃப்ரியா விடுங்க" என்று பதிவிட்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full