அவன் ஹீரோவா பண்ணா அவன் Life மாறும் - தனக்கு வந்த ஹீரோ வாய்ப்பை கவினுக்கு கொடுத்த பிரதீப்.

By subhashini · 23/10/2023

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்று வாரங்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மற்ற பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்களில் பிரதீப் ஆண்டனி ஒருவர். நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி :

ஆரம்பத்தில் இருந்தே பிரதீப் ஆண்டனிக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து சின்ன சின்ன விஷயத்தில் கூட இருவருக்கும் மோதல் இருந்து கொண்டு தான் இருந்தது. இதனை தொடர்ந்து பிரதீப் வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களுடனும் சண்டையில் ஈடுபட்டு இருக்கிறார். இருந்தாலும், இவருடைய கருத்துகளுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் டாடா படத்தின் போது பிரதீப் பண்டனி செய்திருக்கும் செயல்தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

https://twitter.com/SriniMama1/status/1715582263293800629

டாடா படம்:

கடந்த ஆண்டு இயக்குனர் கணேஷ் கே பாபுவின் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் டாடா. இந்த படத்தில் கதாநாயகனாக கவின் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் அபர்ணா தாஸ், வி டிவி கணேஷ், ஹரிஷ் குமார், பிரதீப் ஆண்டனி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலையும் செய்திருந்தது.

பிரதீப் ஆண்டனி செய்த செயல்:

அதுமட்டுமில்லாமல் டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு தான் கவின் உடைய திரைபயணமே மாறியது என்று சொல்லலாம். இந்த நிலையில் முதன் முதலில் டாடா படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது கவின் இல்லை பிரதீப் ஆண்டனி தான் ஹீரோவாக நடிக்க இருந்ததாம். இது தொடர்பாக இயக்குனரும் பிரதீப் இடம் நீண்ட நேரம் கதை சொல்லியிருக்கிறார். கதை கேட்டு முடித்தவுடன் இந்த படம் கவினுக்கு தான் சரியாக இருக்கும. அவனை வைத்து இந்த படத்தை எடுங்கள்.

பிரதீப் ஆண்டனி குறித்த தகவல்:

அந்த படத்தில் வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரம் செய்கிறேன் என்று சொன்னதாக பிரதீப் நண்பரே பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும், பிரதீப் அவர்கள் டாடா படத்திற்கு முன் சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வாழ் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதற்கு பிறகு டாடா படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full