ஒருமனதாக உரிமை குரல் எழுப்பி பிரதீப்பிற்கு ரெட் கார்டு காட்டிய போட்டியளர்கள் - வெளியேற்றப்பட்டார் பிரதீப்.

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஆறாவது வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். கடந்த வா ரம் 5 Wild Card போட்டியாளர்கள் நுழைந்ததால் பிக் பாஸில் 19 போட்டியாளராக மாறியது.

https://twitter.com/Filmophile_Man/status/1719350303513080100

இதனால் Double Eviction என்று அறிவித்து ஷாக் கொடுத்தார் கமல். அந்த வகையில் கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா வெளியேற்றப்பட்டார். Wild Card போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகின்றனர். இதனால் Wild Card போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டார் டார்கட் செய்ய துவங்கிவிட்டனர். இப்படி இரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதில் மணி அடங்கிய பேண்ட் ஒன்றை போட்டியாளர்கள் தலையில் அணிந்துகொள்ள வேண்டும். அப்படி அணிந்துகொண்டு ஒரே இடத்தில் நிற்காமல் நடந்துகொண்டே இருக்க வேண்டும் அப்படி நடக்கும் போது மணியில் இருந்து சத்தம் வந்தால் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதே ரூல்ஸ். இந்த கேமில் மாயா, பூர்ணிமா, கூல் சுரேஷ் ஆகிய சிலர் ஆரம்பத்திலேயே அவுட் ஆகிவிட பிரதீப் தனியாக நடந்துகொண்டு இருந்தார்.

https://www.youtube.com/watch?v=nK_-5ykdbLA

அப்போது கூல் சுரேஷ் சென்று அவர் அவுட் என்று கூறினார். ஆனால், நான் அவுட் ஆகவில்லை என்று பிரதீப் கூறினார். பின்னர் அந்த சுற்றில் அவுட் ஆனவர்களை அறிவித்த போது கூல் சுரேஷ், பிரதீப் பெயரை சொல்ல நீ எல்லாம் பெரிய மனுசனா என்று திட்டி ஒரு மோசமாக T வார்த்தையை கூறினார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் பிரதீப் சொன்னதை ஆரம்பத்தில் விளையாட்டாக எடுத்துக் கொண்டார் கூல் சுரேஷ்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரும் கோபமடைந்தார் என் அம்மாவைப் பற்றி நீ எப்படி அப்படி பேசலாம் நீ எப்படி சொன்னால் என் அம்மா அப்படி ஆகிவிடுவாரா என் அம்மா சத்தியமாக நான் போய் சொல்லவில்லை என்று கூறினார் ஆனால் பிரதீப் என் மணி அடிக்கவே இல்லை அவரே கையில் வைத்திருந்த மணியை ஆட்டி நான் அவுட் என்று சொல்லி ஒரு கேவலமான விளையாட்டு விளையாடினார் என்று முறையிட்டார்.

https://twitter.com/Classicparktv/status/1719361454355439632

பிரதீப் எப்படி தரை குறைவாக பேசியது போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கமல், பிரதீப் படி நடந்து கொண்ட விதம் குறித்து போட்டியாளர்களிடம் கேட்டறிந்தார். அதில் அனைத்து போட்டியாளர்களுமே பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி அவர் செய்தது தவறுதான் என்று அவருக்கு ரெட் கார்டை காண்பித்தார்கள். இதனால் போட்டியாளர்கள் பெரும்பாலானோர் அவருக்கு ரெட் பால் கொடுத்ததால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full