பிரதீப் போட்ட இரண்டு கண்டிஷன்,கமலின் இறுதி முடிவு என்ன? பிரதீப் Re Entry குறித்து வெளியான இறுதியான தகவல்.

By Arun · 11/11/2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது.

https://twitter.com/TheDhaadiBoy/status/1722818584244806137?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள்.

ஆனால், இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை. பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும் இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

https://twitter.com/DeepakC79701581/status/1721533673172853119

பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா&கோ தான் முக்கிய காரணம் என்றாலும் கமல் இந்த விஷயத்தை தீர விசாரிக்காமல் செயல்பட்டுவிட்டார் என்பதே பலரின் வாதமாக இருந்து வருகிறது. பிரதீப்பிற்கு நடந்தது அநீதி அவரை மீண்டும் பிக் பாஸில் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும், கமலை கடுமையாக விமர்சித்தும் பல விதமான பதிவுகளும் வைரலாகி வருகிறது. மேலும், கமல் தான் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்ததாக ஓவ்வொருவாராக உளறி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய பூர்ணிமா ' பிரதீப் செய்ததை எங்களால் சமாளிக்க முடியும். ஆனால், இவர் செய்ததை கமல் சாரால் பொறுக்க முடியவில்லை என்று அவர் தான் அந்த ஆக்ஷன் எடுத்தார். கூல் சுரேஷ் அண்ணாவை பிரதீப் இப்படி பண்ணன்னு தான் ரெட் கார்ட் தூக்கினேன். ஆனால், அவங்க Red Card கொடுத்தது Women Safetyகாக என்று கூறியுள்ளார். மேலும், ரவீனா பேசுகையில் ' அவன் Unsafe என்று சொல்லவில்லை Uncomfortable என்று மட்டும் தான் சொன்னோம்' என்றும் கூறியுள்ளார்.

https://twitter.com/thedhaadiboy/status/1723253529249448000?s=48

இந்த நிலையில் பிரதீப், ’என்னை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே அனுப்பினால் இரண்டு நிபந்தனைகள் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்து இருந்தார். அதில் 'நீங்கள் என்னை உள்ளே அனுப்ப நினைத்தால் எனக்கு எதிராக சதி செய்த இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற இரண்டு சிவப்பு அட்டைகள் எனக்கு வேண்டும். மேலும் நான் பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக ஒரு வாரம் இருக்க விரும்புகிறேன்’ என்று பிரதீப் கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி பிரதீப்பை மீண்டும் நிகழ்ச்சியில் சேர்க்க பிக் பாஸ் குழுவும் கமலும் சம்மதிக்கவில்லையாம். மாறாக பிரதீப் மீது உண்மையில் குற்றம் இருக்கிறதா என்பதை மட்டும் குற்றம் சாடியவர்களிடம் விசாரிக்கப்பட்டு இருக்கிறது. இதனை உறுதி செய்யும் விதமாக பதிவிட்டுள்ள பிரதீப் 'Game Over' ரெண்டு கை ரெண்டு கால் இல்லனாலும் காளிக்கிறவன் பொளச்சிப்பான் சார் கெட்டப்பய சார் அவன். வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கிவிட்டேன். நல்லா இருங்க' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full