பிக்பாஸில் சர்வைவ் பண்ண இது தான் தேவை, ஆனால் நான் வெளியே வந்த காரணம் - பிரவீன் ராஜ் ஓபன் டாக்

By subhashini · 14/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 40 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது. இந்த வாரம் மன்னர் ஆட்சி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிரவீன் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சிக்கு பிறகு அளித்த பேட்டியில் பிரவீன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் என்ன செய்தால் சர்வே பண்ண முடியும் என்று எனக்குமே ஒன்னும் புரியவில்லை. அந்த கேள்வியின் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. பிக் பாஸ், திறமையும் டாஸ்கும் இந்த வீட்டின் ஒரு அங்கம் தான். அதையும் தாண்டி உங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ஆனால், என்ன பண்ணால் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்பது தெரியவில்லை.

பிக் பாஸ் பற்றி சொன்னது:

சண்டை, சர்ச்சை, திறமை என எல்லாமே கலந்த கலவையாக தான் இருக்க வேண்டும். பாரு, விக்கல்ஸ், சுபிக்ஷா எல்லோருமே இந்த மூன்றும் கலந்த கலவையாக தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பிக்பாஸில் நிறைய குரூப்பிஸம் இருக்கிறது. நான் ஒரு குரூப்பில் சிக்கிக் கொண்டேன். ஆனால், சீக்கிரமே அதை உணர்ந்து தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டேன். நான் வெளியேறியதற்கு காரணம் யாருமே கிடையாது.

https://www.youtube.com/watch?v=kdDulEIhoSo

நிகழ்ச்சி சர்ச்சை:

என்னுடைய தன்னம்பிக்கை குறைவாக இருந்தது தான் காரணம். மேலும், நிகழ்ச்சியில் அடல்ட் டாபிக் பற்றி எங்க முன்னாடியே நடந்திருக்கிறது. அதெல்லாம் நேரில் பார்க்கும் போது தான் குமட்டிட்டு வரும். நாங்களே கூப்பிட்டு இதெல்லாம் பண்ணாதீங்கன்னு சொல்லி இருக்கோம். நான் சொன்ன பிறகு எங்க முன்னாடி அப்படி நடந்தது இல்லை. ஆனால், அதெல்லாம் சிலர் கன்டென்ட்க்காகத்தான் பண்ணினார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full