Bjp குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா ? வைரலாகும் வீடியோவால் திட்டி தீர்க்கும் ஆதரவாளர்.

By Arun · 1/12/2021

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் என்றும் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருந்தது இல்லை. அதிலும் குறிப்பாக மூன்றாம் சீசனில் மதுமிதா, கர்நாடகாவை சேர்ந்த ஷெரினிடம் காவேரி பிரச்சனை குறித்து பேசியதால் தான் சண்டை எழுந்து அதனால் அவர் மன அழுத்தத்தில் கைகளை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அதே போல இதே சீசனில் இருந்த சரவணன் கூட சர்ச்சையில் சிக்கினார்.

https://twitter.com/Mysteri13472103/status/1465712494031167502

நடிகர் சரவணன் சிறு வயதில் பேருந்தில் செல்லும் போது பெண்களை இடித்து இருக்கிறேன் என்று சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் நிகிழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக பிக் பாஸில் போட்டியாளர்கள் எதாவது சர்ச்சையான விஷயத்தை பேசினால் அதனை எடிட் செய்துவிடுவர்.

அதை மீறியும் ஏதாவது ஒளிபரப்பபட்டால் அதனை பீப் செய்து விடுவர். அந்த வகையில் இந்த சீசனில் பிரியங்கா Bjp குறித்து மறைமுகமாக தாக்கி பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் தற்போது சவுண்டு பார்ட்டி என்றால் அது நிச்சயம் தாமரை செல்வியாக தான் இருக்கும். இதுவரை தாமாரை செல்வி பிக் பாஸ் வீட்டில் சண்டை இழுக்காதா ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

https://twitter.com/sultan_Twitz/status/1465267343769030662

அந்த வகையில் கடந்த சில நாட்களாக பிரியங்கா மற்றும் தாமரை செல்விக்கு தான் பிரச்சனை சென்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற தலைவர் டாஸ்கில் தாமரை செல்விக்கு தலைவர் ஆகும் தகுதி இல்லை என்று சொன்னதை தற்போது வரை மனதில் வைத்து புலம்பிக்கொண்டு இருக்கும் தாமரை பிரியங்கா தன்னை பற்றி சொன்னதை அக்ஷரா மற்றும் வருணுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது 'தாமரை நாட்டில் இருந்தாலும் பிரச்சனை, வீட்டில் இருந்தாலும் பிரச்சனை' என்று பிரியங்கா சொன்னதாக தாமரை செல்வி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், நாட்டில் என்று சொன்ன அந்த வார்த்தையை மட்டும் பீப் செய்துவிட்டனர். ஆனால், இதே விஷயத்தை பிரியங்காவை நாமினேட் செய்த போதும் சொன்னார் தாமரை.

https://twitter.com/endrum_tamizh/status/1465138114947518465

அப்போதும் 'நாட்டில்' என்ற அந்த ஒரு வார்த்தையை பீப் செய்துவிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பிரியங்காவை பல Bjp ஆதரவாளர்கள் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full