இந்த சீசன்ல இவர் தான் டைட்டில் ஜெயிப்பார், உறுதியாக சொன்ன பிரியங்கா - அதற்கு அவர் சொன்ன காரணம்.

By Arun · 8/12/2022

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் குறித்து தொகுப்பாளினி பிரியங்கா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 60 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

விக்ரமன் குறித்த தகவல்:

இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

https://twitter.com/chettyrajubhai/status/1600860218673762305

நிகழ்ச்சியில் விக்ரமன்:

நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து விக்ரமனுக்கு அதிக ஆதரவு ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். இவர் எந்த ப்ரச்சனை என்றாலும் ஓரம் நிற்காமல் வாதம் செய்து வருகிறார். இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் நடிகர் ஆரி போல் முயற்சி செய்வதாகவும் சிலர் கூறி வருகின்றனர். அதே சமயம் இவர் சேப் ஆகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த சீசனில் விக்ரமன் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.

டைட்டில் வின்னர் குறித்து பிரியங்கா சொன்னது:

இந்த நிலையில் தொகுப்பாளனி பிரியங்கா அவர்கள் பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் குறித்து கூறியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் பிரியங்கா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவரிடம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்தும், டைட்டில் வின்னர் குறித்தும் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு பிரியங்கா கூறியிருப்பது, இந்த சீசனில் விக்ரமன் தான் டைட்டில் வின்னர் ஆகுவார் என்று தோன்றுகிறது.

பிரியங்கா குறித்த தகவல்:

அவர் எல்லா விஷயத்திலுமே தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். அதனால் அவர் தான் வெற்றி பெறுவார் என நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். விஜய் டிவியில் மிகப் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக பிரியங்கா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full