Vijay Television Awardல் பிரியங்காவிற்கு கிடைத்த விருது, கடுப்பான நெட்டிசன்கள் (இதுவும் நியாயம் தான்)

By Ajju · 4/4/2022

வருடம் வருடம் விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் , அனைத்து தரப்பு கவர கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ். ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் இந்த விழா 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு சினிமா துறை கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் விருதுகளில் பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு,ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் பங்கு பெற்று இருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார்.

இதையும் பாருங்க : உடம்புல எத்தன பார்ட்ஸ்ஸ Plastic Surgery பண்ணிருக்கீங்க - ரசிகர் கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் பதில். (இவ்ளோ ஓப்பான சொல்லிட்டாரே)

ஆங்கர் To பிக் பாஸ் :

பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதுமட்டும் இல்லாமல் பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றினார்கள். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார்சமீபத்தில் இவருக்கு கலாட்டா யூடியூப் சேனல் சார்பாக ஐகானிக் உமன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெறும்போது பிரியங்கா ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

தற்காலிகமாக விலகிய பிரியங்கா :

பிரியங்கா சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால்,அதற்க்கு முன்பாகவே கொரோனா கட்டுப்பாடு காரமனாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சில நாட்கள் குவாரனடைனிலும் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார். பிரியங்கா பிக் பாஸில் இருந்த போது அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை மணிமேகலை, அர்ச்சனா, மைனா என்று பலர் ஏற்று நடத்தி வந்தனர்.

பிரியங்காவிற்கு விருது :

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் பிரியங்கா மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிக் பாஸ் முடிந்த கையேடு ஜாலியாக விடுமுறையில் சென்றுவிட்டார். இறுதியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இப்படி கடந்த ஆண்டு பிரியங்கா பெரிதாக ஆங்கரிங் பண்ணாத போதிலும் அவருக்கு சிறந்த தொகுப்பாளர் விருது வழங்கப்பட்டு இருகிறது.

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

இந்த விஷயத்தால் பிரியங்காவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தாலும், ஆங்கரிங் செய்யாமல் எப்படி பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளர் விருது வளழங்கப்பட்டது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் டாப் 5 இடத்திலும் விஜய் டிவி பிரபலங்கள் தான் இடம்பெற்று இருந்தனர். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது என்பது கூறிப்பிடதக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full