கையில் எலிமினேஷன் கார்ட்டுடன் கமல்.! வெளியேற்றபட்டது யார்.! லீக்கான வீடியோ இதோ.!

By Rajkumar · 11/8/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வாரத்தின் முதல் நாள் என்பதால் கடந்த திங்கள் கிழமை இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

https://twitter.com/imrajkumarkanna/status/1160467768958832640

இந்த வாரம் முழுவதும் நடைபெற்று வந்த ஓட்டிங்கில் லாஸ்லியாவிற்கு தான் அதிகப்படியான ஓட்டுக்கள் விழுந்துவந்தன. மேலும், இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே சாக்க்ஷிக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வந்தது என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், நமது வலைதளத்தில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்புகளிலும் சாக்க்ஷிக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்தது.

இதையும் பாருங்க : காலர் ஆப் தி வீக்.! யாருக்கு போன் செய்துள்ளார்கள் பாருங்க.! செம கேள்வி தான்.! 

இந்த நிலையில் இந்த வாரம் சரவணன் வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வந்த நம்பகரமான தகவலின்படி, சாக்க்ஷி இந்த வாரம் வெளியேறியுள்ளாராம். மேலும், அவர் ரகசிய அறையில் கூட வைக்கப்படவில்லையாம்.

தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், லாஸ்லியா காப்பற்றபட்டதாக கமல் அறிவித்துள்ளார். மேலும், சாக்க்ஷி, லாஸ்லியா, அபிராமி ஆகிய மூவருக்கும் சாண்டி மற்றும் கவின் உருவாக்கி வைத்திருந்த பாடலையும் பாடியுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full