mind your words - கடுப்பான ரியோ. இன்னிக்கி என்ன பிரச்சன காத்துட்டு இருக்கோ.

By Rajkumar · 25/11/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்து இருக்கிறது.இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தனர்.பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=71_4jobIlBk

ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் போட்டியாளராக வந்த சுசித்ரா, பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை கடந்த வாரம் ரசிகர்கள் அவரை வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.இந்தவார நோமினேஷனில் சோம், ஆரி, பாலாஜி, அனிதா, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட் ஆனார்கள் . அதன் பின்னர் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷனில் இடம்பெற்ற பின்னர் அதிலிருந்து தப்பிக்க புதிதாக 'Nomination Topple Card' என்ற ஒரு புதிய பாஸை அறிமுகம் செய்து இருந்து இருந்தனர்.

இதை வெற்றி பெரும் நபர் தனக்கு பதிலாக இந்த வாரம் நாமினேட் ஆகாத ஒரு நபரை நாமினேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பின்னர் அனிதாவிற்கு இந்த 'Nomination Topple Card' கிடைத்தது. பின்னர் தனக்கு பதிலாக சம்யுக்தாவை அனிதா நாமினேட் செய்தார். நேற்றய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீடு கால் சென்டராக மாறியது. நேற்றைய நிகழ்ச்சியில் பாலாவிற்கு அர்ச்சனா கால் செய்தது சம்யுக்தாவிற்கு சனம் ஷெட்டி கால் செய்தது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

அதே போல சனம் ஷெட்டி, சம்யுக்தாவிற்கு கால் செய்யும் போது, சம்யுக்தா 'வளர்ப்பு அப்படி' , 'கலீஜ்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆனால், ப்ரோமோவில் மட்டும்தான் இடம் பெற்றதே தவிர நிகழ்ச்சியில் ஒளிபரப்ப படவில்லை இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் 2வது ப்ரோமோமோவில் இந்த டாஸ்க்கினால் சனம் ஷெட்டி மற்றும் ரியோவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full