அர்ச்சனா கொடுத்த பட்டங்களில் இந்த ஒரு பட்டத்தால் கமலுக்கு ஏற்பட்டுள்ள மனக்குறை.

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது இந்த இரண்டு வாரங்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சுவாரசியமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. இரண்டு வாரம் ஆகியும் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கூட கொடுக்கப்படவில்லை. இதனால் ஒருசில எபிசோடுகளை தவிர மற்ற எபிசோடுகள் அனைத்தும் மிகவும் போராக சென்று கொண்டிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=F1lHwa1kFfo&feature=youtu.be

அதிலும் ஒருசில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியவில்லை. இத்தனை எபிசோடுகளில் சுரேஷ் சக்கரவர்த்தி அனிதாவின் பிரச்சினை சனம் ஷெட்டி மற்றும் பாலாஜியின் பிரச்சினை என்று இந்த இரண்டு பிரச்சினையை தவிர வேறு எதுவும் பெரிதாக இல்லை. அதையும் கடந்த வாரம் கமல் பஞ்சாயத்து செய்து முடித்துவிட்டார். அதே போல எவிக்ஷன் ப்ரீ டாஸ்கின் போது சுரேஷின் தந்திரமான ஆட்டம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது.

இப்படி ஒரு நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்கு வைல்டு ரெக்கார்டு போட்டியாளராக வந்துள்ளார். ஆனால், அவரையும் கமெரா கொஞ்சம் கம்மியாக தான் காட்டி வருகிறது. மேலும் ஆதித் இடம் பிரீ பாஸ் இருக்கும் நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நடத்திய டாஸ்க்கில் ஜெயித்து அடுத்த வாரத்திற்கான நாமினேஷனிலிருந்து சனம் ஷெட்டி வேல்முருகன் ஆகிய இருவருமே தப்பித்து விட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி நாராயணன், அஜித், ரேகா, சனம் ஷெட்டி, கேப்ரில்லா ஆகிய 7 பேர் இடம்பெற்றனர். இந்த வாரம் முழுவதும் பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டு வந்த வாக்கெடுப்பில் சனம் ஷெட்டி மற்றும் ரேகா தான் கடைசி இடத்தில் இருக்கின்றனர். எனவே இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் தான் இந்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full