புத்தி இல்ல - சம்யுக்தாவை போனில் வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.

By Rajkumar · 24/11/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு செய்து தற்போது 50வது எபிசோடை நெருங்கியுள்ளது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது.

https://www.youtube.com/watch?v=_aLR1Q2sQHE&list=PLsSTkBgqx7oshYsjndqNjDkJqnvQAyXJ0

ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் போட்டியாளராக வந்த சுசித்ரா, பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை கடந்த வாரம் ரசிகர்கள் அவரை வழியனுப்பி வைத்துவிட்டார்கள். நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கி இருந்தது .

நேற்றய நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்தவார நோமினேஷனில் சோம், ஆரி, பாலாஜி, அனிதா, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட்ஆனார்கள் . அதன் பின்னர் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷனில் இடம்பெற்ற பின்னர் அதிலிருந்து தப்பிக்க புதிதாக 'Nomination Topple Card' என்ற ஒரு புதிய பாஸை அறிமுகம் செய்து இருந்து இருந்தனர். இதை வெற்றி பெரும் நபர் தனக்கு பதிலாக இந்த வாரம் நாமினேட் ஆகாத ஒரு நபரை நாமினேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பின்னர் அனிதாவிற்கு இந்த 'Nomination Topple Card' கிடைத்தது. பின்னர் தனக்கு பதிலாக சம்யுக்தாவை அனிதா நாமினேட் செய்தார். இன்றைய பிக் பாஸ் வீடு கால் சென்டராக மாறியுள்ளது.அதில் கால் சென்டரில் மற்ற போட்டியாளர்கள் தங்களுக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் சம்யுக்தாவிற்கு சனம் ஷெட்டி கால் செய்து பேசுகிறார். அப்போது சம்யுக்தா நீங்கள் பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கிறீர்கள் ஆனால் வாயை திறந்தாலே கலீஜ் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full