இந்த 60 நாள்ல என்ன பண்ணீங்க ? பிக் பாஸ் கேட்ட கேள்வி. ஷிவானி என்ன சொல்றார் பாருங்க.

By Rajkumar · 4/12/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. அதே மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

https://www.youtube.com/watch?v=fnx-aB9TeOI&feature=youtu.be

நேற்றய நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜட் டாஸ்கின் அடிப்படையில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதன் அடிப்படையில் 1 -ல் இருந்து 13 வரை வரிசைபடுத்துமாறு கூறப்பட்டு இருந்தது .இதில் அனிதா தனக்கு இரண்டாவது இடம்தான் வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். ஆனால், அவருக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அதனை ஏற்க மறுத்து அடம் பிடித்த அனிதாவிற்கு இறுதியில் பத்தாம் இடம்தான் கிடைத்தது. மற்றவர்கள் அனைவரும் அனிதாவை சமாதானம் செய்து பார்த்தனர்.

ஆனால், இதுவரை சமாதானமாக அனிதா தனக்கான இடம் இங்கே இல்லை என்று இறுதிவரை நிற்காமல் சென்று விட்டார். நேற்றைய நிகழ்ச்சியில் இந்த டாஸ்கின் போது பல்வேறு விவாதங்கள் எழுந்தது. அவ்வளவு ஏன் சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் விவாதம் சென்றபோது ஒருகட்டத்தில் கடுப்பான பாலாஜி உன்னிடம் போய் நான் பேசினேன் என்று கூறி தன் காலில் இருந்த செருப்பை கழட்டி தன்னைத்தானே அடித்துக் கொண்டது பெரும் வேடிக்கையாக இருந்தது. இன்று வெளியான இரண்டு ப்ரோமோகளிலும் நேற்று நடைபெற்ற டாஸ்க் பற்றி தான் போட்டியாளர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.

தற்போது இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போட்டியாளர்களிடம் இந்த 60 நாட்களில் இந்த பிக் பாஸ் வீட்டில் என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிக் பாஸ். அதில் ஆஜீத், ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ் உட்பட அனைவரும் திரு திருவென முழிக்கின்றனர். இதில் ஷிவானி, இந்த டாஸ்க் பஸ்ஸர் எப்போது அடிக்கும் என்று கேட்டுள்ளார். ஷிவானி 60 நாளில் என்ன செய்தார்னு நீங்களே சொல்லுங்க.

Tamil Behind Talkies AMP · Quick view
View full