தன்னை தொடர்ந்து வெளியேறிய தன் பிக் பாஸ் மகள் குயின்ஸிக்கு ராபர்ட் மாஸ்டர் செய்த விஷயம் - சொந்த மகளுக்கு கூட இப்படி பன்னிருக்க மாட்டார்.

By Ajju · 7/12/2022

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஏழாவது எவிக்ஷனில் வெளியேறிய குயின்ஸி வெளியில் வந்ததும் முதல் ஆளாக தனது பிக் பாஸ் அப்பா ராபர்ட் மாஸ்டரை சந்தித்து இருக்கிறார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 54 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத பல போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள். அதில் ஒருவர் தான் குயின்சி. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர்.

இவர் மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின்பு ஆல்பம் சாங்ஸ், கவர் சாங்ஸ் போன்றவை மூலம் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் குயின்சி. அது மட்டும் இல்லாமல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் அன்பே வா தொடரிலும் குயின்சி நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவரது வசீகர தோற்றதால் இவருக்கு ரசிகர்கள் கூடினார்கள்.

ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வரும் விதத்தை பார்த்து இவரை மிச்சர் லிஸ்டில் சேர்த்துவிட்டனர் ரசிகர்கள். அதுவும் இவர் பிக் பாஸ் வீட்டில் தூங்குவது, சாப்பிடுவது, வேலை செய்யாமல் இருப்பது என்று தான் இருக்கிறார் என்று பலர் கேலி செய்து வருகின்றனர். அதே போல தனக்கு சிக்கன் வேண்டும் என்று பிக் பாஸிடம் இவர் கேட்க அதனை பிக் பாஸ் அனுப்பி வைத்ததில் இருந்தே இவரை கோட்டா குயின்சி என்று பலரும் கேலி செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய குயின்ஸி முதல் ஆளாக தனது பிக் பாஸ் அப்பா ராபர்ட் மாஸ்டரை தான் சந்தித்து இருக்கிறார். தனது பிக் பாஸ் மகள் குயின்சியை வந்ததை கேக் வெட்டி வரவேற்று இருக்கிறார் ராபர்ட் மாஸ்டர். அதிலும் அவர்கள் கேக் வெட்டிய இடத்திற்கு பின்னால் I Love My daughter என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியே பிறகு ராபர்ட் மாஸ்டர் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பது, உறவைத் தேடி தான் நான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தேன் என்று ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். நான் எதைத்தேடி போனேனோ அது எனக்கு கிடைத்துவிட்டது. குயின்சி எனக்கு மகளாக கிடைத்தது ரொம்ப சந்தோஷம்.அதுமட்டுமில்லாமல் என்னுடைய புரொடக்ஷன் கம்பெனியோட பெயரே குயின்சி என்றுதான் வைக்கப் போறேன். அவள் பேரளவில் மட்டுமல்ல உண்மையாகவே என் சொந்த பொண்ணாக தான் நான் நினைக்கிறேன்' என்றும் கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full