'இப்படி இருந்தா எப்படி சாப்பிட முடியும்' - அரிய வகை பிரச்சனையால் அவதிப்படும் ரஷிதா.

By Manikandan · 9/10/2023

அரியவகை நோயால் பிக் பாஸ் ரக்ஷிதா அவஸ்தை பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் என்ற அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார். இதில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்து இருந்தார். இவர்களுடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், பல திருப்பங்களுடனும், விறுவிறுப்புடனும் சென்று இருந்த இந்த சீரியலை விட்டு ரக்ஷிதா திடீரெனெ விலகி விட்டார்.

ரக்ஷிதா குறித்த தகவல்:

கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்தார். ஆனால், அந்த சீரியலும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மனம் நொந்து போன ரஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கடைசி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் வேறு எந்த தொடரிலும் கமிட் ஆகவில்லை.

ரக்ஷிதா-தினேஷ்:

மேலும், இவர் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இருவரும் சில வருடங்கள் நன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இடையில் என்ன பிரச்சனை ஆனது? என்று தெரியவில்லை. இருவருமே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பிரிந்து இருந்தார்கள்.

ரக்ஷிதா அளித்த பேட்டி:

தற்போது இவர்கள் இருவரின் பிரச்சனை சோசியல் மீடியாவில் வைரலாகி விவாகரத்து வரை வந்து இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ரக்ஷிதா பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், எனக்கு வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது. பொதுவாகவே உணவு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும். அதுதான் இயல்பான ஒரு விஷயம். ஆனால், எனக்கு சாப்பாட்டை முகர்ந்து பார்த்தால் கூட எடை கூடி விடுகிறது. இப்படிப்பட்ட அரிய வகை ஹார்மோன் பிரச்சினையால்தான் நான் அவஸ்தைப்பட்டு வருகிறேன்.

ரக்ஷிதாவுக்கு ஏற்பட்ட அரியவகை நோய்:

சமீபத்தில் என்னுடைய உடல் எடை அதிகரித்து இருந்ததால் தான் நான் மருத்துவராய் அணுகி ட்ரீட்மென்ட்
எடுத்தேன். அப்போது மருத்துவர்கள் தான் இந்த அதிர்ச்சி தகவலை சொன்னார்கள். இருந்தாலும் நான் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்து என்னுடைய எடை கூடாத அளவிற்கு மெயின்டைன் செய்து கொண்டு வருகிறேன். தற்போது ரக்ஷிதாவின் இந்த வித்தியாசமான ஹார்மோன் பிரச்சனையை பற்றி அறிந்த உடன் ரசிகர்கள் பலரும் ஆறுதலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full