கல்லா பெட்டி விவகாரம், தனலட்சுமியை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்த ரஷிதா - விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

By ·

பேக்டரி டாஸ்கில் ரக்ஷிதா செய்த செயலை கண்டித்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஐந்து வாரம் கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல்,ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

https://twitter.com/winsiva1994/status/1591843677684797440

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். வழக்கம் போல் டாஸ்க் கொடுத்து போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து தன் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை அடுத்து மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா வெளியேறி இருந்தார்கள்.

பேக்டரி டாஸ்க்:

நேற்று நிகழ்ச்சியில் இருந்து மகேஸ்வரி வெளியாகி இருந்தார். அது மட்டும் இல்லாமல் கமலஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் தனலட்சுமி அணியை வறுத்து எடுத்து இருந்தார். அதிலும் ஃபேக்டரி டாஸ்க் குறித்து பல விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். அதாவது, கடந்த வாரம் ஃபேக்டரி டாஸ்க் நடந்தது. அதில் அட தேனடை, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து தங்களுக்கு கொடுத்த இனிப்பு பொருட்களை வைத்து பலகாரம் செய்து விற்பனை செய்தார்கள்.

https://twitter.com/fairtweep/status/1591947931355156482

தனலட்சுமி அணி செய்த செயல்:

அப்போது சம்பாதித்த பணத்தை கல்லாப்பெட்டியில் வைக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறியிருந்தார். இதில், தனலட்சுமி அணி விதிமீறி கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து வேறொரு இடத்தில் பதிக்க வைத்திருந்தார்கள். தனலட்சுமி செய்த செயல் அந்த அணியில் இருந்த ரக்ஷிதா, அமுதவாணன், குயின்சி எல்லோருக்குமே தெரிந்தது. ஆனால், இது குறித்து அவர்கள் எதுவுமே பேசவில்லை. இதனை அடுத்து வார முடிவில் இந்த ஃபேக்டரி டாஸ்க் தனலட்சுமி அணி தான் வெற்றி பெற்றது என்று கூறி இருந்தார்கள்.

https://twitter.com/Madziedee/status/1591836924767047680

கமல்ஹாசன் சொன்னது:

அதுமட்டும் இல்லாமல் தனலட்சுமி இந்த வார எவிக்ஷனில் இருந்து தப்பிக்கிறார் என்றும் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமலஹாசன் அவர்கள் இதுகுறித்து கூறியது, இந்த டாஸ்க்கில் முழுக்க முழுக்க விதிமீறல்கள் நடந்து இருக்கிறது. பணம் கல்லாப்பெட்டியில் இருக்க வேண்டும் என்று அறிவித்தும் பணத்தை பதுக்கியது மிகவும் தவறான ஒன்று. ஆகையால், இந்த வெற்றியை தனலட்சுமி இடம் பறித்து விக்ரமனிடம் கொடுக்கப்படுகிறது.

ரக்ஷிதாவை விமர்சிக்கும் ரசிகர்கள்:

அதோடு தனலட்சுமி எவிக்ஷனில் இருக்கிறார். தனலட்சுமி செயலுக்கு உடந்தையாக ரக்ஷிதா, அமுதவாணன், குயின்சி ஆகியோரும் இருந்திருக்கிறார்கள். இது மிக மிக தவறான ஒன்று பேசி இருந்தார். இதனை அடுத்து தனம் கதறி கதறி அழுது இருந்தார். ரக்ஷிதா, குயின்சி ஆகியோர் இந்த பிரச்சனைக்கு சம்மந்தம் இல்லாதது போல் பேசி இருந்தார்கள். மொத்த பழியையும் தனம் மேல் போட்டு விட்டார்கள். இதனால் கடுப்பான ரசிகர்கள் ரக்ஷிதா செயலை கண்டித்து விமர்சித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full