கல்யாணம் பண்ணா இந்த நடிகரை தான் பண்ணுவேன்.! நடிகை ரைசாவின் பதிலால் ஷாக்.!

By Rajkumar · 2/4/2019

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றவரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கென சமூகவலைதளத்தில் ஒரு சில ஆர்மி கூட உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் விஐபி-2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், அதன் பின்னர் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையும் படியுங்க : எதிர் நீச்சல் படத்தில் நடித்த நடிகை.! இப்போ எப்படி இருகாங்க பாருங்க.! 

பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகை ரைசா. தற்போது ஜிவி பிரகாஷ் நடித்துவரும் 'காதலிக்க யாரும் இல்லை' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், ஆலிஸ் என்ற படத்திலும் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரைசாவிடம் 'நடிகர்களின் நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரைசா, கண்டிப்பாக தளபதி விஜய் தான் என்று கூறியுள்ளார். அவர் இந்த வயதிலும் மிகவும் இளமையாக இருக்கிறார் என்றும் அவரைப் போன்று மிகவும் ஸ்வீட்டான நடிகர் வேறு யாரும் இல்லை என்றும் நடிகை ரைசா புகழாரம் சூட்டியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full