தத்தெடுத்த ரைசா. ரசிகர்களிடம் கேட்ட உதவி. கமெண்ட்ஸை பாருங்க.

By Rajkumar · 29/5/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. என்னதான் 3 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.

https://twitter.com/raizawilson/status/1266037395972952064

அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதுமட்டும் இல்லாமல் ரைசா அவர்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் மேலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். மற்ற நடிகைகளை போல ரைசாவிற்கு செல்ல பிரணாகிகள் வளர்ப்பதிலும் அதிக ஆர்வம். அந்த வகையில் நடிகை ரைசா சமீபத்தில் ஒரு பூனையை தத்தெடுத்து உள்ளார். மேலும், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தனது ரசிகர்களிடம் உதவி கேட்டுள்ளார் ரைசா.

பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ரைசா அவர்கள் 2018 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து "பியார் பிரேமா காதல்" படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ஆலிஸ் என்ற படத்திலும் ஜி வி பிரகாஷ் நடித்து வரும் காதலிக்க நேரமில்லை என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்கள் எல்லாம் திரைக்கு வர வைட்டிங்.

behindtalkies AMP · Quick view
View full