மருத்துவர் விளக்கமளித்த பின்னரும் தனது முகத்தை புகைப்படம் எடுத்து ரைசா கேட்ட கேள்வி. (ரொம்ப பாவம்யா)

By Rajkumar · 21/4/2021

பொதுவாக நடிகைகள் என்றாலே தங்களது உடல் மற்றும் அழகை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற் பயிற்சிகளையும் அழகை பார்த்துக்கொள்ள அடிக்கடி பியூட்டி பார்லருக்கு பல ஆயிரம் செலவு செய்து வருவது தான் நடிகைகளின் வாடிக்கை. இப்படி ஒரு நிலையில் பியூட்டி பார்லர் சென்று பேஷியல் பண்ணதால் தற்போது ரைசாவின் முகம் அலங்கோலமாக மாறி இருக்கிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பகிர்ந்து புலம்பி தள்ளி இருந்தார் ரைசா.

அதில் ரைசாவின் கண்களுக்கு கீழ் வீக்கம் இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் ஷாக் ஆனார்கள். இதுகுறித்து தெரிவித்துள்ள ரைசா, சமீபத்தில் சாதாரண பேஷியல் போடுவதற்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்ததாகவும், அப்போது அவர் தான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் எனக்கு தேவையில்லாத விஷயங்களை செய்ததால் இப்படி ஆகிவிட்டது.

இதையும் பாருங்க : அஜீத்தை வீடியோ எடுத்ததால் வேலை இழந்த அப்பல்லோ ஊழியர். உதவி கேட்டு அஜித்தை சந்திக்க முடியாமல் போனதால் தற்கொலை முயற்சி.

இதை தொடர்ந்து நான் அவரிடம் பேச நினைத்தால் என்னை அவர் சந்திக்க மறுக்கிறார். ஊழியர்களிடம் கேட்டால் கூட அவர் வெளியூரில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள் என்று பரிதாபத்துடன் பகிர்ந்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் சம்மந்தப்பட்ட தோல் மருத்துவமனையின் மருத்துவர் பைரவி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், இருபக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை, சீர் செய்யும் dermal fillers சிகிச்சையே ரைசாவிற்கு அளிக்கப்பட்டது.

இதே, சிகிச்சையை ஏற்கனவே ஒரு முறை ரைசா எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது அதே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையால் ஒருவாரத்திற்கு முகம் வீக்கமாகவே இருக்கும். ஆனால், ரைசா முகம் வீங்கியதால் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பைரவி. இப்படி ஒரு நிலையில் தனது முகத்தை மீண்டும் படமெடுத்து பதிவிட்டுள்ள ரைசா,

behindtalkies AMP · Quick view
View full