தமிழ் பட ஐட்டம் சாங்கு இது எவ்ளோவோ தேவலாம் -கிளாமர் போட்டோவின் அசிங்கமான கமண்டுகளுக்கு ரைசா பகிர்ந்த பதிவு.

By ·

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.

அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் கஜோலுக்கு க்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : மீசையை சரியா ஷேவ் பண்ணலயா ? லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அடிக்கடி எதாவது பதிவிட்டு சிக்கலில் சிக்கிவிடுகிறார். சமீபத்தில் கூட பேஷியல் சென்ற இடத்தில் விபரீதம் ஏற்பட்டு ரைசாவின் முகம் அலங்கோலமானது. இது குறித்து பைரவி செந்தில் மீது ரைசா மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் கொஞ்சம் நாட்கள் ஓட சமீபத்தில் தான் ரைசாவின் முகம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியது. @charissma beauty_clinic க்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு பழைய நிலைமைக்கு திரும்பதியதாக கூறி இருந்தார் ரைசா.

சமீபகாலமாக எந்த ஒரு கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடாமல் இருந்த ரைசா தற்போது முதல் முறையாக இதுவரை இல்லாத படுகவர்ச்சியான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று வியந்து போய் பல விதமான கமெண்டுகளை பதிவிட்டனர். இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர்,இதில் இவர் ஹாட்டாக இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன் அதற்காக யார் என்றே தெரியாமல் என்ன வேண்டுமானாலும் டைப் பண்ணலாமா? தொனனதெல்லாம் கமெண்ட் பண்ணலாமா ? இந்த புகைப்படத்தை தமிழ் படங்களில் வரும் ஐட்டம் சாங் உடன் ஒப்பிட்டால் இது எவ்வளவோ பரவாயில்லை.

போட்டோ போடறது அவங்க இஷ்டம் அப்படின்னா கமெண்ட் பண்றது என் இஷ்டம் அப்படின்னு சொல்றவங்கள என்ன சொல்றதுன்னு தெரியல இதையெல்லாம் நமக்குள்ளே வெச்சிட்டு வேண்டியதுதானே அது ஊருக்கே சொல்லனுமா என்று பதிவிட்டு இருந்தார். ரசிகரின் அந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ரைசா, அந்த நபருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full