ஹீரோவான பிக் பாஸ் ராஜு, முதல் படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கே பிரம்மாண்ட போஸ்டர், ஸ்பெசல் விழா
கவின் குறித்து தன்னுடைய பட விழாவில் ராஜூ பிக் பாஸ் ராஜூ கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். முதலில் இவர் நடிகர் பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடித்தார்.
இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார். பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் ராஜூ நடித்திருந்தார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதனால் ராஜுவுக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ராஜு:
இந்த நிகழ்ச்சியில் கொள்ளும் திறமையாக விளையாடி ராஜு முதல்பரிசை தட்டி சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் இவர் ராஜி ஊட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் ராஜு ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=EzMXZibzT7I
ராஜு ஹீரோவாக நடிக்கும் படம்:
இவர் Rain of Arrows Entertainemt நிறுவனத்தின் கீழ் சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிக்கும் பன் பட்டர் ஜாம் படத்தில் தான் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே காலம் அவள் வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இவர் சைஸ் ஜீரோ, பாரம் போன்ற படத்திற்கு வசனத்தை எழுதி இருந்தார். மேலும், இந்த படத்தில் ராஜூவுக்கு ஜோடியாக பவ்யா த்ரிகா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, விஜே பப்பு, மைக்கேல் தங்கதுரை, சார்லி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
படம் குறித்த தகவல்:
Gen Z தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பை பற்றிய கதை தான் பன் பட்டர் ஜாம். ஒருவருக்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை முழுமையாக ஏற்று வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதை தான் இயக்குனர் நகைச்சுவை கலந்த பாணியில் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இன்று இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும், பேப்பரிலும் சோசியல் மீடியாவிலும் தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார்கள். ஆனால், ராஜூவின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விழா போல கொண்டாடி இருக்கிறார்கள்.
கவின் குறித்து ராஜு சொன்னது:
30 அடி உயரம் கொண்ட போஸ்டரை வைத்திருக்கிறார்கள். பின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்திருக்கிறார்கள். அப்போது ராஜுவிடம் நீங்கள் கவின் இடத்திற்கு பிடிக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ராஜு, அப்படி எல்லாம் இல்லை. அவர் நல்ல நண்பர். அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தார் என்று தெரியும். அவர் எப்படியெல்லாம் யோசிப்பார் என்றும் தெரியும். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பற்றி தான் யோசிப்பேன். இயக்குனர் சொன்னதை சரியாக செய்ய வேண்டும். என்னுடைய நடிப்பு மக்களுக்கு பிடிக்க வேண்டும். இதை பற்றி மட்டும் தான் யோசிக்கிறேன். மற்றபடி போட்டியை பற்றி எல்லாம் நான் யோசித்தது கிடையாது. போற போக்கில் கொளுத்தி போடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.