பிக் பாஸ் நிகழ்ச்சி 93 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சிபி, அமீர், நிரூப் என்று 7 பேர் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். இப்படி ஒரு நிலையில் அமீரை தவிர இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இதனால் இந்த 6 பேரில் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிக் பாஸ் என்றாலே அதில் விஜய் டிவி பிரபலங்கள் கண்டிப்பாக இருந்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் ப்ரியங்கா, ராஜு ஆகிய இருவரும் விஜய் டிவி பிரபலங்கள் தான். இதில் பிரியங்காவை பற்றி அனைவருக்கும் தெரியும். நடிகர் ராஜூ ஜெயமோகன் அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார்.

Advertisement

கனா காணும் காலங்கள் To பிக் பாஸ் :

இவர் தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீசனில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் ரோலில் நடித்த கவினுக்கு நண்பராக நடித்திருந்தார்.

ராஜு நடித்த சீரியல்கள் :

இதனை தொடர்ந்து இவர் ஆண்டாள் அழகர்,பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து இருந்தார். பிறகு இவர் சின்னத்திரையில் மிகவும் பரிச்சயமான முகமாக தோன்றினார். அதற்கு பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா படத்தில் லீட் ரோலில் நடிகர் ராஜூ நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் ராஜூ சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார்.

Advertisement

நடிகரான பின்னரே திருமணம் :

மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரை பதித்த பின்பு தான் இவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜுவிற்கு ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் தான் இவர் பாக்கியராஜிடம் உதவியாளராக சேர்ந்தார்.

Advertisement

ராஜுவின் முதல் குறும்படம் ‘அ அ அ ஆ’ :

மேலும், ராஜு ஒரு சில குறும்படங்களை கூட இயக்கி இருக்கிறார். அந்த வகையில் இவர் இயக்கிய முதல் குறும்படமான ‘அ அ அ ஆ’ குறும்படம் பற்றி கடந்து வந்த பாதை டாஸ்கில் சொல்லி இருந்தார். மேலும், அந்த குறும்படம் கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் பாக்கியராஜ் சிறப்பு விருந்தினராக வந்த போது போட்டு காண்பிக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார் ராஜு. அந்த குறும்படம் இது தான்.

Advertisement