விஜய் டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் ரம்யா.! புகைப்படம் இதோ.!

By Rajkumar · 16/9/2019

கடந்த ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் . அதில் நமக்கு பரிட்சியமான முகமாக சில பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுகமானார்கள் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் தான் ரம்யா, என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவர் என்றே தெரியவந்தது.

https://www.instagram.com/p/B2MDljzjXzz/

பழம் பெரும் நடிகர் என் எஸ் கலைவாணரின் பேத்தியான இவர், சங்கீதத்தின் மீது மிகுந்தஆர்வம் கொண்டவர். அதனால் தான் தனது சிறு வயது முதலே கர்னாடிக் தனது முறைபடி கற்று வந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சங்கீதம் கற்று வந்த இவர், இதுவரை தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை படியுள்ளார்.

கர்னாடிக் சங்கீதத்தோடு, ரேப் பாடல்கள் பாடுவதிலும் மிகுந்த கெட்டிக்காரியாக இருந்து வருகிறார் பாடகி ரம்யா. சங்கீதத்தின் மீது அளவில்லா பற்று கொண்டுள்ள ரம்யா, தனது கழுத்தின் பற்று வலது பக்கத்தில் ஒரு வித்யாசமான சங்கீத நோட்ஸ் கொண்ட ஸ்வரங்களை டாட்டூவாக குத்தியுள்ளார்.

இந்தநிலையில் பாடகி ரம்யா விஜய் டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மும்தாஜ், ஜனனி ஐயர் போன்ற முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தனது திருமண அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ரம்யா, ரம்யாவின் இந்த திடீர் திருமணத்தால் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் அடைந்துள்ளனர்.

ரம்யா திருமணம் செய்துகொண்டுள்ள நடிகர் சத்யா, கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்ற தொடரில் ஜெய்சூர்யா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் தர்ஷனின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ரம்யா மற்றும் சத்யா இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணமா இல்லை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் என்பது தெரியவில்லை இருப்பினும் இத்தனை எளிதாக நடைபெற்றுள்ள இவர்களது திருமணத்தை வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக இது காதல் திருமணம் ஆக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full